எய்சேபியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எய்சேபியோ
Ajman 1968-09-15 stamp - Eusébio da Silva Ferreira.jpg
சுய தகவல்கள்
முழுப் பெயர்எய்சேபியோ ட சில்வா ஃபெரேரா
பிறந்த நாள்சனவரி 25, 1942(1942-01-25)
பிறந்த இடம்மொசாம்பிக்
இறந்த நாள்5 சனவரி 2014(2014-01-05) (அகவை 71)
இறந்த இடம்லிஸ்பன், போர்த்துகல்
உயரம்1.75 m (5 ft 9 in)
பன்னாட்டு வாழ்வழி
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
1961–1973போர்த்துகல்[1]64(41)

எய்சேபியோ , (Eusébio da Silva Ferreira; 25 சனவரி 1942 – 5 சனவரி 2014) , மொசாம்பிக்கில் பிறந்த போர்த்துகீசிய கால்பந்து வீரர். கால்பந்து வரலாற்றில் ஒரு சகாப்தம் என்று அறியப்பட்டார் .[2][3]

தொழில்முறை போட்டிகள்[தொகு]

ஆப்ரிக்க நாடான மொசாம்பிக், போர்ச்சுகலின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலப்பகுதியில், அவர் போர்த்துகல் அணிக்காக விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.சுமார் பத்தாயிரம் டாலர்கள் அளவுக்கு பணம் கொடுத்து தமது அணிக்காக விளையாட ஃபென்ஃபிகா அணி அவரை ஒப்பந்தம் செய்தது.[4] போர்ச்சுகல் அணிக்காக 64 போட்டிகளில் விளையாடிய அவர் அந்நாட்டுக்காக 41 கோல்களை அடித்துள்ளார். [5]

போர்ச்சுகலில் உள்ள பென்பிகா விளையாட்டரங்கத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ள எய்சேபியோவின் சிலை
போர்த்துகல் அணிக்காக
வருடம் தோற்றங்கள் கோல்கள்
1961 2 1
1962 5 2
1963 1 0
1964 6 4
1965 7 7
1966 12 12
1967 6 3
1968 2 1
1969 4 2
1970 1 0
1971 5 2
1972 9 4
1973 4 3
மொத்தம் 64 41

சிறப்புகள்[தொகு]

1962 ஆம் ஆண்டு ஃபென்ஃபிகா அணி ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது.[6] இவர் 1966 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் மிக அதிக அளவில் கோல்களை அடித்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர் .தனது கால்பந்து வாழ்க்கையில் தொழில்முறை ரீதியில் அவர் விளையாடிய 745 போட்டிகளில் அவர் 733 கோல்களை அடித்துள்ளார். காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுபவர், கறுஞ்சிறுத்தை என்று அவர் வெகுவாகப் புகழப்பட்டார் .[4]

இறப்பு[தொகு]

இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் , தனது 71 ஆவது வயதில் சனவரி 5 , 2014இல் காலமானார். அவரது மரணத்தை முன்னிட்டு போர்த்துகல் நாட்டு அரசு மூன்று நாள் அரசுமுறை துக்கம் அறிவித்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pierrend, José Luis (29 October 2005). "Eusébio Ferreira da Silva – Goals in International Matches". Rec.Sport.Soccer Statistics Foundation. 10 March 2009 அன்று பார்க்கப்பட்டது.
  2. Stokkermans, Karel (30 January 2000). "IFFHS' Century Elections". Rec.Sport.Soccer Statistics Foundation. 10 March 2009 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Eusebio: Portugal football legend dies aged 71". BBC Sport. 5 January 2014. 5 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 "கறுஞ்சிறுத்தைக்கு' கால்பந்து உலகம் அஞ்சலி". பிபிசி. 06 சனவரி 2014. 15 சனவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  5. Eusébio Ferreira da Silva – Goals in International Matches. Rsssf.com (2005-10-29). பார்த்த நாள் 2011-05-08.
  6. "கால்பந்து உலகில் ஆளுமை செலுத்திய 'கறுஞ்சிறுத்தை'". பிபிசி. 06 சனவரி 2014. 15 சனவரி 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எய்சேபியோ&oldid=2714754" இருந்து மீள்விக்கப்பட்டது