உள்ளடக்கத்துக்குச் செல்

எம். சித்தானந்த மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். சித்தானந்த மூர்த்தி
பிறப்பு(1931-05-10)10 மே 1931
கிரேகோகளூர், சென்னகிரி வட்டம், தாவண்கரே மாவட்டம், கருநாடகம், இந்தியா
இறப்பு11 சனவரி 2020(2020-01-11) (அகவை 88)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
இருப்பிடம்ஆர்பிசி லேஅவுட்
விஜயநகர், பெங்களூரு
பணிபேராசிரியர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர்

எம். சித்தானந்த மூர்த்தி (M. Chidananda Murthy) (1931 மே 10 - 2020 சனவரி 11) [1] இவர் ஓர் கன்னட எழுத்தாளரும், ஆராய்ச்சியாளரும் மற்றும் வரலாற்றாசிரியருமாவார். இவர் கன்னட மொழி மற்றும் பண்டைய கர்நாடக வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற கர்நாடகாவில் நன்கு அறியப்பட்ட அறிஞராக இருந்தார். அம்பி [2] நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதற்கும், கன்னட மொழியானது செம்மொழி அந்தஸ்தைப் பெறுவதற்கும் இவர் பிரச்சாரம் செய்தார். [3] ஒரே மாதிரியான குடிமை சட்டம் மற்றும் மாற்றத்திற்கு எதிரான சட்டம் ஆகியவை இந்தியாவில் அரசாங்கத்தால் இயற்றப்பட வேண்டும் என்றும் மூர்த்தி வலியுறுத்தினார். [4]

கல்வி

[தொகு]

சித்தானந்த மூர்த்தி மைசூர் பல்கலைக்கழகத்தில் 1953ஆம் ஆண்டில் இளங்கலை கலை (ஆனர்சு) பட்டம் பெற்றார். கன்னட இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தை 1957இல் அதே பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றார். மைசூர் பல்கலைக்கழகத்தில், தனது முதுகலை படிப்பின் போது, இவர் பம்பா குவெம்பு, பு. தி. நரசிம்மாச்சார், ராகவாச்சார் போன்ற கன்னட இலக்கிய பிரமுகர்கள் மற்றும் எஸ். சிறீகாந்த சாத்திரி போன்ற வரலாற்றாசிரியர்களின் செல்வாக்கின் கீழ் வளர்ந்தார். கன்னட கல்வெட்டுகள் குறித்த முனைவர் பட்ட ஆராய்ச்சியில் மூர்த்தியை மற்றொரு இலக்கியத் தலைவரான தி. என். சிறீகாந்தையா வழிநடத்தினார். இவரது முனைவர் பட்ட ஆய்வானது 'கன்னட கல்வெட்டுகளின் கலாச்சார ஆய்வு' என்ற தலைப்பில் இருந்தது. [5] 1964இல் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

தொழில்

[தொகு]

மூர்த்தி கன்னட பெங்களூர் பல்கலைக்கழகத் துறையின் தலைவராகவும் இருந்தார். கன்னட சக்தி கேந்திரத்துடனும் தொடர்பு கொண்டிருந்தார். ஒரு வரலாற்றாசிரியராக மூர்த்தியின் பெரும்பாலான படைப்புகள் கன்னட கல்வெட்டுகளின் அறிவியல் ஆய்வில் கவனம் செலுத்தியது. கல்வெட்டுகளை அவற்றின் சமூக கலாச்சார அமைப்பில் சூழ்நிலைப்படுத்த இவர் முயன்றார். கன்னட மொழி மற்றும் கர்நாடக வரலாறு குறித்த பல புத்தகங்களைத் தயாரித்தார். இவர் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டினார்.

விருதுகள்

[தொகு]

நோய் மற்றும் மரணம்

[தொகு]

சித்தானந்த மூர்த்தி 2020 சனவரி 9 ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்குப் பிறகு, சனவரி 11, அன்று அதிகாலை 4 மணியளவில் இறந்தார். [1]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Jagadish Angadi (11 January 2020). "Veteran Kannada scholar M Chidananda Murthy dies". www.deccanherald.com. பார்க்கப்பட்ட நாள் 11 January 2020.
  2. "Protect monuments in Hampi: Chidananda Murthy". 22 Jan 2010. Archived from the original on 1 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2010-04-16.
  3. "Press demand for according classical status to Kannada". The Hindu. April 17, 2006. Archived from the original on 2006-05-24. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "Chidananda Murthy comes out in favour of uniform civil code". The Hindu. April 25, 2006. Archived from the original on 2006-08-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. 5.0 5.1 "The Hindu : Pampa Award for Chidananda Murthy". Hinduonnet.com. Dec 25, 2002. Archived from the original on April 22, 2003. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Alva's Nudisiri 2006: Complete Coverage". www.mangalorean.com. Archived from the original on 7 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-04-16.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Zydenbos, Robert J. (July 1997). "Vīraśaivism, Caste, Revolution, Etc". Journal of the American Oriental Society 117 (3): 525–535. doi:10.2307/605250. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._சித்தானந்த_மூர்த்தி&oldid=3705322" இலிருந்து மீள்விக்கப்பட்டது