எமில் குருப்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எமில் குருப்பே (Emil Herman Grubbe, 1 சனவரி 1875 - 26 மார்ச் 1960) என்பவர் அமெரிக்கக் கதிர் மருத்துவர். இவரே அமெரிக்காவில் முதன் முதலில் எக்சு-கதிர்களைப் புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தியவராக அறியப்படுகிறார்.[1]

சிகாகோவில் பிறந்த இவர் ஓமியோபதி கல்வி நிறுவனமான ஆனிமன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பயிற்சியைப் பெற்றார்.[2][3] 1895 ஆம் ஆண்டில் எக்சு-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1896 ஆம் ஆண்டில் எக்சு-கதிர் கருவியை தமது மருத்துவக் கல்லூரியில் பொருத்தினார்.[4] அதே ஆண்டில், 1896 சனவரி 29 ஆம் நாளில் இரு நோயாளிகளுக்கு எக்சு கதிர்களைக் கொண்டு மருத்துவம் மேற்கொண்டார். அவர்களில் ஒருவர் மார்பகப் புற்றுநோயாலும் மற்றவர் புண்ணான லூபசு நோயாலும் (Lubus) பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர் மிகவும் எளிமையான குரூக்சு குழாயுடன் எக்சு கதிர்களைப் பெற்றார். நோயில்லாத உடலின் பிறப் பகுதிகளை ஈயத்தகட்டினால் மறைத்து பாதுகாக்கவும் செய்தார்.[5]

அவரே முதல் கதிர்மருத்துவரும் (Radiotherapist), கதிரியல் பாதுகாப்பினை (Radiation Protection) மேற்கொண்ட நல இயற்பியல் (Health Physicist) அறிஞரும் ஆவார்.

அடிக்கடி சுட்டப்படும் நான்கு கதிர் மருத்துவ நிகழ்வுகளாவன:

  • சிக்காகோவில் 29-1-1896-ல் 18 வயது நோயாளி - மார்பகப்புற்று - தினம் கதிர் வீச்சல் - தொடர்ந்து 18 நாட்கள்
  • வாய்கிட் (Voigt) ஆம்பெர்க் - 3-2-1896 - 83 வயது- தொண்டைப் புற்று
  • டெஸ்பெய்க்னசு லயன் - 4-7-1896 - 52 வயது - லிம்போமா, இரைப்பை.
  • பிறியுண்ட் (Preund) - 24-11-1896 - 5 வயது பெண்குழந்தை- பெரிய மச்சம் - முடிஅகற்ற.

முதலில் பதிவுசெய்யப்பட்ட கதிர்மருத்துவம் டெஸ்பெய்க்னசு அவர்களுடையதாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pioneer in X-Ray Therapy". சயன்சு 125 (3236): 18–19. 4 சனவரி 1957. 
  2. Pendergrass, Eugene P. (Autumn 1965). "Review of The Life and Times of Emil H. Grubbe by Paul C. Hodges". Isis 56 (3): 395. 
  3. "Brief Biography of Emil Grubbe". Chicago Radiological Society. பார்த்த நாள் 8 September 2011.
  4. Evans, Titus C. (சூன் 1951). "Review of X-Ray Treatment: Its Origin, Birth, and Early History by Emil Grubbe". Quarterly Review of Biology 26 (2): 223. 
  5. "Emil H. Grubbe, M.D., F.A.C.P. (obituary)". British Medical Journal 2 (5198): 609. 20 ஆகத்து 1960. 
  • AROI souvenir july 2006-22nd conference chennai.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமில்_குருப்பே&oldid=2707915" இருந்து மீள்விக்கப்பட்டது