உள்ளடக்கத்துக்குச் செல்

எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எபிரேய மொழிப் புத்துயிர்ப்பு என்பது எவரும் முதல் மொழியாக பேசாமல், புலமை மொழியாக மட்டும் இருந்த எபிரேய மொழியை 19 ம் நூற்றாண்டில் புத்துயிர்ப்பு செய்த நிகழ்வு ஆகும். இதுவே மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்ட மொழிப் புத்துயிர்ப்பு. இன்று சுமார் 10 மில்லியன் மக்கள் எபிரேய மொழியைப் பேசுகிறார்கள். இது இசுரேல் நாட்டின் அலுவல் மொழியும் ஆகும்.

வரலாறு

[தொகு]

எபிரேய மொழிக்கு 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது இசுரேலில் கிமு 10 நூற்றாண்டில் இருந்து கிமு 4 ம் நூற்றாண்டு வரை பேச்சு வழக்கில் இருந்தது. கிமு 4 ம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் அரசியல் மாற்றங்களிலால் அரமேய மொழி செல்வாக்குப் பெற்றது. இதைத் தொடர்ந்து யூத உயர் குடிகள் அரமேய மொழியை அதிகம் பயன்படுத்தலாயினர். எபிரேய மொழியின் பேச்சு வழக்கு குன்றியது. எனினும் அது தொடர்ச்சியாக சமயத்தில், இலக்கியத்தில், அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குறிப்பாக யூத சமயத்தின் Tanakh, Talmud, Zohar ஆகிய சமய நூல்கள் எபிரேய மொழியில் எழுதப்பட்டன.

யூத அறிவொளிக் காலம்

[தொகு]

19 ம் நூற்றாண்டு யூத அறிவொளிக் காலமாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே முழு வீச்சுடன் எபிரேய எழுத்தும், பேச்சும் புத்துயிர்ப்புக் காணத் தொடங்கியது. இக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட யூத தேசிய இயக்கம் (Zionism) யூதர்கள் நலன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இவ் இயக்கத்தில் பங்கெடுத்த Eliezer Ben Jehuda என்பவரே எபிரேய மொழியின் புத்துயிர்ப்பாளர் என்று அறியப்படுகிறார்.

வெளி இணைப்புகள்

[தொகு]