என். சி. சமந்தசிங்கர்
என்.சி. சமந்தசிங்கர் N. C. Samantsinhar | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | புவனேசுவரம் நாடாளுமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பூரி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்பொழுது ஒடிசா) | 2 மார்ச்சு 1912
இறப்பு | 18 அக்டோபர் 1982 ஒடிசா, இந்தியா | (அகவை 70)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | சவுத்து அவென்யூ, புது தில்லி |
வேலை | அரசியல்வாதி |
என். சி. சமந்தசிங்கர் (N. C. Samantsinhar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1912 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி புவனேசுவர் மக்களவைத் தொகுதியிலிருந்து 2ஆவது மக்களவை உறுப்பினராகவும் [1] 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய துணை சனாதிபதித் தேர்தலில் இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.[2] [3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சமந்தசிங்கர் 1912 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பூரி மாவட்டத்தில் (அப்போது பிரித்தானிய இந்தியாவில் வங்காள மாகாணம் ) [4] மகேசுவர் சமந்தசிங்கருக்கு மகனாகப் பிறந்தார். மனோரமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். [5] புது டெல்லியில் உள்ள சவுத் அவென்யூ பகுதியில் இவர் வசித்து வந்தார். [6]
சமந்தசிங்கர் 1982 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியன்று தன்னுடைய 70 ஆவது வயதில் இறந்தார்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "LIST OF MEMBERS OF PARLIAMENT" (PDF).
- ↑ Report on the General Elections in India.
- ↑ "Venkaiah Naidu vs Gopalkrishna Gandhi: 6 vice-presidents who went on to become presidents".
- ↑ Ilbert, Sir Courtenay Peregrine (1922). The Government of India, Third Edition, revised and updated. Clarendon Press. pp. 117–118.
- ↑ "Member's Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 2023-01-07.
- ↑ Report on the Third General Elections, 1962: To the Assam Legislative Assembly and the House of the People.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1982. p. 1. பார்க்கப்பட்ட நாள் 26 February 2023.