என். கே. கே. பி. ராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். கே. கே. பி. ராஜா
தமிழ்நாடு ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சர்
பதவியில்
2006 – ஆகத்து 2008
முதன்மை அமைச்சர்மு. கருணாநிதி
முன்னையவர்வி. சோமசுந்தரம்
பின்னவர்சாத்தூர் ராமச்சந்திரன்
தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர்
பதவியில்
2006–2011
முன்னையவர்கே. எஸ். தென்னரசு
தொகுதிஈரோடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 மார்ச்சு 1966 (1966-03-08) (அகவை 58)
ஆவரங்காடு, தமிழ்நாடு , இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்பரிமளர் ராஜா
பிள்ளைகள்NKKP.நரேன் ராஜா
வாழிடம்கவின்டப்பட்டி
இணையத்தளம்Member Profile - Thiru RAJA, NKK. P.

என். கே. கே. பி. ராஜா (N. K. K. P. Raja) 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் நாள் பிறந்தார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.இவர் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை மு. கருணாநிதி அமைச்சரவையில் தமிழ்நாடு ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை் கருணாநிதி அமைச்சரவையில் இதே இலாகாவை வகித்த முன்னாள் அமைச்சரான என்.கே.கே.பெரியசாமியின் மகனாவார் . இவர் தமிழ்நாட்டில் ஈரோடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.[1][2]

சர்ச்சைகள்[தொகு]

2008ஆம் ஆண்டு  சூன் மாதத்தில்  ஒரு வயதான தம்பதியினரை  NKKP ராஜா  தொலைபேசியில் அழைத்து, தங்கள் 10-ஏக்கர் (40,000 m2) நிலத்தை இவருடைய ஆட்களுக்கு ஆதரவாகப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். சொத்துக் கோரிக்கை தொடர்பாக கடத்தப்பட்டதில் ராஜா மேலும் ஒரு சிலருக்கு  பங்கு இருப்பதாக இவர்களை குற்றம் சாட்டினர்.  வயதான தம்பதியினர் தங்கள் பேரக்குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி ஒரு குறிப்பையும் தாக்கல் செய்தனர்.[3]

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர் மாநில அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.[4] 2009 ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் இவர் இத் தம்பதியரின் மகன் சிவபாலனுடன் கடுமையான தகராறில் ஈடுபட்டார். ராஜா மற்றும் சிவபாலன் இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மற்றவர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.[5] அக்டோபர் 26,2009இல் இவர் திமுகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. Karthik Madhavan (27 April 2006). "Debutants test the waters in Erode". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 March 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080303205956/http://www.hinduonnet.com/2006/04/27/stories/2006042703020300.htm. பார்த்த நாள்: 2008-03-12. 
  2. "Council of Ministers of Tamil Nadu". Tamil Nadu Legislative Assembly. Archived from the original on 2008-02-02. பார்க்கப்பட்ட நாள் 2008-03-12.
  3. "TN minister in property row". The Times of India. 30 July 2008. https://timesofindia.indiatimes.com/city/chennai/TN-minister-in-property-row/articleshow/3303863.cms. பார்த்த நாள்: 20 September 2019. 
  4. Raja dropped from State Cabinet
  5. Sivabalan assaulted me: Ex-minister Raja
  6. chive.org/web/20091029124155/http://www.hindu.com/2009/10/26/stories/2009102658790400.htm N.K.K.P.Raja expelled
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._கே._கே._பி._ராஜா&oldid=3847925" இலிருந்து மீள்விக்கப்பட்டது