என். ஏ. நெல்லிக்குன்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். ஏ. நெல்லிக்குன்னு, கேரள அரசியல்வாதி. இவர் 1954-ஆம் ஆண்டின் மார்ச்சு பதினெட்டாம் நாளில் பிறந்தார். அப்துல் காதர், நசீபா என்ற இணையருக்கு பிறந்தார். இவர் மலையாள நாளேடுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குன்னு, இவரது சொந்த ஊராகும். இவர் காசர்கோடு சட்டமன்றத் தொகுதியில் வென்று, பதின்மூன்றாவது கேரள சட்டமன்ற அவையில் உறுப்பினர் ஆனார். இவர் 53068 வாக்குகள் பெற்றார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._ஏ._நெல்லிக்குன்னு&oldid=3343831" இலிருந்து மீள்விக்கப்பட்டது