உள்ளடக்கத்துக்குச் செல்

என். என். பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்.என்.பிள்ளை
பணிநடிகர், நாடக ஆசிரியர் மற்றும் நாடக இயக்குனர்
பெற்றோர்உள்ளிலாக்கிரு பறம்பில் நாராயண பிள்ளை, வைக்கம் தெக்கத்தில் பாருக்குட்டி அம்மா
வாழ்க்கைத்
துணை
சின்னம்மா
பிள்ளைகள்விஜயராகவன், சுலோச்சனா மற்றும் ரேணுகா

என். என். பிள்ளை (N. N. Pillai, 1918–1995) இந்தியாவின் கேரளம் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் ஒரு நாடக ஆசிரியர், நடிகர், நாடக இயக்குனர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவார். இவர் 30 நாடகங்களையும் 40 ஓரங்க நாடங்களையும் நடத்தியுள்ளார்.[1] இவர் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தின் வைக்கம் ஊரில் பிறந்தவர். கோட்டையம் சி.எம்.எஸ் கல்லூரியில் படித்து தேர்ச்சியடையாததால் வேலைக்காக மலேசியா நாட்டிற்குச் சென்று அங்கு சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ரானுவத்தில் சேர்ந்தார். பின்னர் 1945 ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினார். இவரது நாடகங்கள் கேரளா, இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டது. மேலும் இவர் மாநில மற்றும் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் உள்ளிலாக்கிரு பறம்பில் நாராயண பிள்ளை, வைக்கம் தெக்கத்தில் பாருக்குட்டி அம்மா ஆவர்.[2] இவருக்கு பிறந்தவர்கள் விஜயராகவன், சுலோச்சனா மற்றும் ரேணுகா ஆவோர்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "N N Pillai's Plays Published". oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2009-02-09.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2013-12-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._என்._பிள்ளை&oldid=3546171" இலிருந்து மீள்விக்கப்பட்டது