எனது நாடக வாழ்க்கை (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எனது நாடக வாழ்க்கை (நூல்)
ஆசிரியர்(கள்):தி. க. சண்முகம்
வகை:தன்வரலாறு
துறை:வரலாறு
இடம்:சென்னை மொழி = தமிழ்
பக்கங்கள்:528
பதிப்பகர்:வானதி பதிப்பகம்
பதிப்பு:முதற் பதிப்பு 1972

எனது நாடக வாழ்க்கை என்பது அவ்வை சண்முகம் அவர்களின் தன் வரலாற்று நூலாகும்.[1] இது அவரது வாழ்க்கை வரலாறு என்றாலும், அது 50 ஆண்டுகால, தமிழ் நாடக வரலாற்றைச் சொல்லும் நூலாகும். இந்த நூலில் 1918 ஆம் ஆண்டு தொடங்கி 1972 வரை தன் நாடக உலக அனுபவங்களை எழுதியிருக்கிறார். இந்த நூல் முதலில் கவி கா. மு. ஷெரீப் நடத்திய சாட்டை என்ற வார இதழில் தொடராக வந்தது பின்னர் அதன் தொகுப்பு நூல்வடிவம் பெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "எனது நாடக வாழ்க்கை". கூகுல் புக்ஸ். பார்த்த நாள் 7 செப்டம்பர் 2017.
  2. பிரபஞ்சன் (2017 செப்டம்பர் 6). "தனக்குத் தான் பொய்யாதிருத்தல்!". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 செப்டம்பர் 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

[1] விக்கி மூலத்தில், எனது நாடக வாழ்க்கை மின்நூலாக