எத்னோலொக்கின் விரிவான சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எத்னோலொக்கின் விரிவான சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீடு (Ethnologue's Expanded Graded Intergenerational Disruption Scale) என்பது ஃபிசர்மனின் சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீட்டு முறையையும், யுனெசுகோவின் ஆறு நிலை மொழிகளின் அழிவுநிலை அளவீட்டு முறையையும் இணைத்து விரிவான ஒரு மொழி நல அளவீட்டு முறையாக முன்வைக்கப்படுகிறது. இந்த முறையினை எம். போல் லூவிசு மற்றும் ஃகேரி எப். சிமன்சு ஆகிய மொழி ஆய்வாளர்கள் 2009 ஆம் ஆண்டளவில் அழிவுநிலையை மதிப்பீடுசெய்தல், பிசுமனின் அளவீட்டை விரிவாக்கல் என்ற ஆய்வுக்கட்டுரையில் முதலில் முன்வைத்தனர்.[1] இந்த அளவீடு எத்னொலோக்கின் உலக மொழிகளின் தரவுத் திரட்டிலும், பல்வேறு மொழியியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

13 நிலை அளவீடு[தொகு]

நிலை நிலையின் பெயர் விபரிப்பு யுனெசுகோ நிலை
0 அனைத்துலக மொழி அனைத்துலக அளவில் பல களங்களில் மொழி விரிவாகப் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பானது
1 தேசிய மொழி கல்வியில், பணித்தளங்களில், பெரும் ஊடகங்களில், அரசில் தேசிய அளவில் மொழி பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பானது
2 பிராந்திய மொழி உள்ளூர், மாநில/மாகாண பெரும் ஊடகங்களிலும் அரச அலுவல்களிலும் மொழி பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பானது
3 வணிகத்தில் உள்ளூரிலும், மாநில/மாகாண அளவிலும் உள்ளூர்காரர்களாலும், வெளியூர்காரர்களாலும் வியாபாரத்தில் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பானது
4 கல்வியில் மொழியறிவு பொதுக் கல்வி ஊடாகப் பரிமாறப்படுகிறது. பாதுகாப்பானது
5 எழுத்தில் ஒட்டுமொத்தமாக எல்லாத் தலைமுறையினராலும் பேச்சளவிலும், ஓரளவு எழுத்தளவிலும் குமுக மட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பானது
6a உயிர்ப்புடன் ஒட்டுமொத்தமாக எல்லாத் தலைமுறையினராலும் பேச்சளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் தாய்மொழியாக மொழியைக் கற்கின்றனர். பாதுகாப்பானது
6b அச்சுறுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக எல்லாத் தலைமுறையினராலும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சில பெற்றோரே குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறார்கள். ஊறுபடத்தக்கது
6b நகர்கிறது பெற்றோர் தலைமுறை மொழியைப் பயன்படுத்தும் அளவுக்கு அறிந்துள்ளனர், ஆனால் யாரும் குழந்தைகளுக்கு மொழியைப் பரிமாறவில்லை. அழிவுநிலையில்
8a இறக்கும்நிலை முதியவர்களுக்கு (பெற்றோரின் பெற்றோர்) இடையே மட்டுமே மட்டுமே மொழி பேசப்படுகிறது. மோசமான அழிவுநிலையில்
8b ஏறக்குறைய அழிந்துவிட்டது. முதியவர்கள் (பெற்றோரின் பெற்றோர்) மட்டுமே பேசக்கூடியவர்கள், ஆனால் இவர்களுக்கு இம் மொழியைப் பேசுவதற்கான வாய்ப்பு அரிது. உச்ச இக்கட்டனான அழிவுநிலையில்
9 வழக்கற்றநிலை இனத்துவ அடையாளத்தின் நினைவாக மொழி உள்ளது, ஆனால் யாருக்கும் குறியீட்டுப் பயன்பாட்டுக்கு மேலான திறன் கிடையாது. அழிந்தநிலை
10 அழிந்தநிலை யாரும் மொழியோடு இனத்துவ அடையாளத்தை தொடர்புபடுத்திப் பேணவில்லை, குறியீட்டு நோக்கங்களுக்குக் கூட இம் மொழி பயன்படுத்தப்படுவதில்லை. அழிந்தநிலை

மேற்கோள்கள்[தொகு]

  1. Assessing Endangerment: Expanding Fisherman's GIDS[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]