பிசுமனின் சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிசுமனின் சீராக்கப்பட்ட தலைமுறையிடை இடையூறு அளவீடு (Fishman's Graded Intergenerational Disruption Scale, Fishman's GIDS) என்பது ஒரு மொழியின் அழிவுநிலையை அல்லது நலத்தை மதிப்பீடு செய்ய உதவும் ஒரு மதிப்பீட்டுச் சட்டகம் ஆகும். இது மொழிப் புத்துயிர்ப்புக் கோட்பாட்டில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.[1] இந்த அளவீட்டை மொழியியலாளர் யோசுவா பிஷ்மன் என்பவர் 1991 ஆண்டில் முன்வைத்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு யுனெசுக்கோ 6 நிலை மொழி அழிவுநிலை அளவீடு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.[2]

பிசுமனின் எட்டுநிலை அளவீடு[தொகு]

  • நிலை 1: கல்வியில், வேலைத்தளத்தில், பெரும் ஊடகங்களில், தேசிய அரசுகளில் மொழி பயன்படுத்தப்படுகிறது.
  • நிலை 2: உள்ளூர் மற்றும் மாநில அரசுகளிலும் பெரும் ஊடகங்களிலும் மொழி பயன்படுத்தப்படுகிறது.
  • நிலை 3: உள்ளூர் மற்றும் மாநில அளவில் உள்ளூர்காரர்களாலும், வெளியூர்காரர்களாலும் மொழி பயன்படுத்தப்படுகிறது.
  • நிலை 4: மொழியறிவு கல்வி ஊடாக பரிமாறப்படுகிறது.
  • நிலை 5: மொழி பேச்சளவில் எல்லாத் தலைமுறையினராலும், எழுத்துமுறையில் திறனாக குமுக அளவிலும் பயன்படுத்தப்படுகிறது.
  • நிலை 6: மொழி பேச்சுமொழியாக எல்லாத் தலைமுறையினராலும் பயன்படுத்தப்படுகிறது, குழந்தைகளால் முதல் மொழியாகக் கற்கப்படுகிறது.
  • நிலை 7: குழந்தை பெற்கும் தலைமுறை மூத்தோர்களோடு மொழியைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள், ஆனால் குழந்தைகளுக்கு மொழியறிவு பகிரப்படவில்லை.
  • நிலை 8: பெற்றோரின் பெற்றோர் தலைமுறையினர் மட்டுமே மொழியைப் பேசக்கூடியவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "From Assessing Language Endangerment or Vitality to Creating and Evaluating Language Revitalization Programmes" (PDF). Archived from the original (PDF) on 2015-12-23. பார்க்கப்பட்ட நாள் 2012-12-17.
  2. UNESCO’s Language Vitality and Endangerment Methodological Guideline

வெளி இணைப்புகள்[தொகு]