எட் யோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எட் யோங்
Ed Yong.JPG
பிறப்புதிசம்பர் 1981 (age 37)
படிப்புmaster's degree
படித்த இடங்கள்

எட் யோங் (Edmund Soon-Weng Yong  திசம்பர் 1981) என்பவர் பிரித்தானிய அறிவியல் எழுத்தாளர், இதழாளர், மற்றும் நூலாசிரியர் ஆவார். நேச்சர், சயன்டிபிக் அமெரிக்கன், தி கார்டியன், நியூ சயன்டிஸ்ட் , தி டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் போன்ற ஆங்கில இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நேஷனல் ஜியோகிராபிக் சார்பாக இவரது வலைப்பூ 'நாட்  எக்ஸாக்லி ராக்கட் சயன்ஸ்' என்னும் பெயரில் வெளியாகி வருகிறது.[1] 2015 முதல் தி அட்லாண்டிக் என்னும் இதழின் நிலையான ஆசிரியர் குழுவில் இருந்து வருகிறார்.

கல்வித்தகுதியும் விருதுகளும்[தொகு]

2002 இல் எட் யோங் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பயின்று விலங்கியல் அறிவியலில் பட்டம் பெற்றார் பின்னர். 2005 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் எம். பில். பட்டம் பெற்றார்.

இவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளுக்காகவும் படைப்புகளுக்காகவும் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. ஐ கன்டெய்ன் மல்டிடியூட்ஸ்  என்னும் பெயரில் ஒரு நூலும் எழுதியுள்ளார்.[2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்_யோங்&oldid=2734572" இருந்து மீள்விக்கப்பட்டது