உள்ளடக்கத்துக்குச் செல்

எசு. வி. சுனில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோம்வார்பேட் விட்டலாச்சார்ய சுனில்
S. V. Sunil
தனித் தகவல்
முழு பெயர்சோம்வார்பேட் விட்டலாச்சார்ய சுனில்
பிறப்பு6 மே 1989 (1989-05-06) (அகவை 35)
குடகு, கர்நாடகா, இந்தியா
உயரம்176 cm (5 அடி 9 அங்) (5 அடி 9 அங்)
விளையாடுமிடம்முன்களப் பின்னணி
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
–2008பெங்களுரு ஐ பிளையர்சு
–தற்சமயம்Services
–தற்சமயம்IOCL
2013–presentபஞ்சாப் வாரியர்கள்13(4)
தேசிய அணி
2007–தற்சமயம்India166(56)
Last updated on: 10 November 2015

சோம்வார்பேட் விட்டலாச்சார்ய சுனில் (Somwarpet Vittalacharya Sunil ) இலண்டன் 2012 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்ற ஒரு வீரராவார். எசு.வி.சுனில் என்றழைக்கப்படும் இவர் ஒரு தொழில்முறை வளைகோல் பந்தாட்ட வீராராக விளையாடி வருகிறார் [1].

இளமைப்பருவம்

[தொகு]

கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் விட்டலாச்சார்யா, சாந்தா தம்பதியருக்கு 1989 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி இவர் பிறந்தார். நான்கு வயதாக இருக்கும்போதே தன்னுடைய தாயை இழந்தார். இவருடைய தந்தை ஒரு தச்சராகவும் சகோதரர் ஒரு பொற்கொல்லராகவும் [2] பணிபுரிந்து வந்தனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சுனில் தன்னுடைய இளமைக் காலத்தில் மூங்கில் குச்சியை வளைகோலாகப் பயன்படுத்தி பயிற்சி பெற்றார் [3].

வாழ்க்கைப்பணி

[தொகு]

சென்னையில் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பைப் போட்டியில் சுனில் முதுநிலை அனைத்துலகப் போட்டியாளராக அறிமுகமானார். இப்போட்டியில், இந்தியா வெற்றி பெற்றது.[1] 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற சுல்தான் அசுலான் சா கோப்பைப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இவரும் ஒரு வீரராக இருந்தார். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்கள் கோப்பைப் போட்டியில் முன்கள வீரராக [1] விளையாடி இந்தியாவுக்காக நான்கு கோல்கள் அடித்தது இவருடைய வாழ்நாள் சாதனையாகும். வளைகோல் பந்தாட்டத்தில் இந்தியாவின் மிகவிரைவு ஆட்டக்காரர் என்று கருதப்படும் இவர், இந்திய தேசிய வளைகோல் பந்தாட்ட அணிக்கு மிகவும் பொருத்தமான வீரர் என்றும் கருதப்படுகிறார். ஆட்டத்தின் போது இடப்புறமாகவும் வலப்புறமாகவும் ஓடுவதில் வல்லவரான இவர் விலாப்பகுதியில் இருந்து தாக்குதல் கொடுப்பதில் வல்லவர் என்றும் கருதப்படுகிறார். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை போட்டியிலும் இவர் இந்தியாவிற்காக விளையாடினார். இந்தியா இப்போட்டியில் முதன்முதலாக வெள்ளிப் பதக்கம் பெற்றது. ஆத்திரேலியாவுடனான இறுதிப் போட்டியை 0-0 என்ற சமநிலையில் முடித்த இந்தியா அணி இறுதியில் ஆத்திரேலியாவிடம் 3-0 என்ற் கோல் கணக்கில் தோற்றது. சுனில் சில் முக்கியமான இன்றியமையாத கோல்களை அடித்துள்ளார். அதேபோல சில முக்கியமான கோல்களை மற்றவர்கள் அடிப்பதற்கு உதவி செய்தவராகவும் சுனில் முக்கியத்துவம் பெற்றுள்ளார். எதிராளிகளை ஏமாற்றி விரைவாக பந்தைக் கடத்திச் செல்லும் ஒரு இந்திய வீரராக சுனில் கருதப்படுகிறார்.

இந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டமைப்பு

[தொகு]

இந்திய வளைகோல் பந்தாட்ட கூட்டமைப்புப் போட்டிகளில் விளையாடும் வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணி சுனிலை 42,000 அமெரிக்க டாலர்களுக்கு [4] ஏலமெடுத்தது. சுனிலுக்காக நியமிக்கப்பட்டிருந்த அடிப்படை விலை 13900 அமெரிக்க டாலர்களாகும். பஞ்சாப் அணி பஞ்சாப் வாரியர்கள் என்ற பெயரில் போட்டிகளில் கலந்து கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Sunil: a key forward and a special player". The Hindu. 9 February 2012. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Kannadiga Sunil shines despite Father's demise". Our Karnataka. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "Meet the heroes of Hockey". Men's Health. Archived from the original on 29 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 25 August 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. "Hockey India League Auction: the final squads list". CNN. 2012-12-16 இம் மூலத்தில் இருந்து 2012-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121219014754/http://ibnlive.in.com/news/hil-auction-as-the-teams-shape-up/310745-5-136.html. பார்த்த நாள்: 2013-01-14. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._வி._சுனில்&oldid=3779681" இலிருந்து மீள்விக்கப்பட்டது