சுல்தான் அசுலான் சா கோப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுல்தான் அசுலான் சா கோப்பை (Sultan Azlan Shah Cup) மலேசியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஓர் பன்னாட்டு ஆண்கள் வளைதடிப் பந்தாட்டப் போட்டியாகும். 1983ஆம் ஆண்டு ஈராண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் போட்டியாகத் தொடங்கியது வளர்ச்சியும் புகழும் பெற்று 1998ஆம் ஆண்டுமுதல் ஆண்டுக்கொருமுறை நடத்தப்படுகிறது. வளைதடிப் பந்தாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மலேசியாவின் ஒன்பதாவது யாங் டிபெத்துவன் அகோங் மன்னர் சுல்தான் அசுலான் சா நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியா 2009ஆம் ஆண்டு 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வென்று கோப்பையை வென்றது. 2010ஆம் ஆண்டில் தென் கொரியாவுடனான இறுதியாட்டம் மோசமான காலநிலையால் கைவிடப்பட்டு இருவரும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியா கோப்பையை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டது[1]. 2013 ம் ஆண்டு ஐந்தாம் இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

http://www.azlanshahcup.com/ அலுவல்முறை இணையதளம்