எசு. ஆர். இரமணன்
எசு. ஆர். இரமணன் (S. R. Ramanan) என்பவர் இந்திய வானிலை ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ள சூறாவளி எச்சரிக்கை மையத்தின் மேனாள் இயக்குநர் ஆவார்.[1][2][3] சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் தத்தெடுப்பு ஆராய்ச்சி மையத்தின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார்.[4] காலநிலை குறித்த இவருடைய தனித்தன்மையான அறிவிப்பின் காரணமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்தார். இரமணன் 36 ஆண்டுகள் வானிலை ஆய்வாளராக இருந்து ஜூலை 2016-ல் ஓய்வு பெற்றார்.[5] இவர் பெரும்பாலும் "மழை நாயகன் இரமணன்", "மழையின் வார்த்தை", "மாணவர்களின் கடவுள்", "மழையின் மகாத்மா", "கடலோர மாவட்ட கடவுள்" மற்றும் "மின்னலின் ஜன்னல்" என்று அழைக்கப்படுகிறார்.[6][7]
கல்வி
[தொகு]எறையூர் கிராமத்தில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியினை முடித்த இரமணன், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் வேளாண் காலநிலையியல் துறையில் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
தொழில்
[தொகு]இரமணன் 1980ல் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் பணியில் சேர்ந்தார். புது தில்லியில் உள்ள வடக்கு அரைக்கோள ஆய்வு மையத்திலும், சென்னை விமான நிலையத்தின் விமான வானிலை ஆய்வு மையத்திலும் முன்னறிவிப்பாளராக பணியாற்றினார். பின்னர், 1995-ல் தானியங்கி செய்தி மாறுதல் அமைப்பை நிறுவும் போது அதில் தீவிரமாக பணியில் ஈடுபட்டார். 2002-ல் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.[சான்று தேவை] . இவர் சென்னையில் உள்ள மண்டல வானிலை மையத்தில் உள்ள பகுதி புயல் எச்சரிக்கை மையத்தில் பணியில் சேர்ந்தார். இவர் 2006-ல் பன்னாட்டு சுழற் சங்கம் வழங்கும் "கௌரவ விருது" பெற்றார். பசுமை இல்ல வாயுக்கள் தொடர்பாக 1998ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற நிகழ்வில் இவர் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார். மே 2013-ல் பாங்காக்கில் கடலோர அபாயங்களுக்கான ஒருங்கிணைந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தொடர்பாக இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
பணி ஓய்வு
[தொகு]இரமணன் 2016 மார்ச் 31 அன்று மண்டல வானிலை ஆராய்ச்சி மையத்தில் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார்.[8]
ஆதாரங்கள்
[தொகு]- NIQR பரணிடப்பட்டது 2017-09-23 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "OFFICE OF THE DEPUTY DIRECTOR G". www.imdchennai.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
- ↑ Srinivasa Ramanujam. "Rain man Ramanan". The Hindu.
- ↑ "Rains give weatherman a hero's status in Tamil Nadu". timesofindia-economictimes.
- ↑ "Academics". www.annauniv.edu. பார்க்கப்பட்ட நாள் 2015-11-20.
- ↑ "Ramanan, director of area cyclone warning centre in Chennai, retires - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.
- ↑ Karthikeyan Hemalatha (31 March 2014). "Ramanan, director of area cyclone warning centre in Chennai, retires". The Times of India.
- ↑ "Why does Chennai love the 'Rain God' SR Ramanan?". CatchNews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.
- ↑ K, Lakshmi. "'Rain man' Ramanan to retire on March 31". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 9 May 2017.