எசுடிஎசுஎசு ஜோ815+4729
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Lynx |
வல எழுச்சிக் கோணம் | 08h 15m 54.26778s[1] |
நடுவரை விலக்கம் | +47° 29′ 47.6013″[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F5V[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -108[2] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -14.257 மிஆசெ/ஆண்டு Dec.: -24.214 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 0.4089 ± 0.0685[1] மிஆசெ |
தூரம் | approx. 8,000 ஒஆ (approx. 2,400 பார்செக்) |
விவரங்கள் [3] | |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.7 ± 0.6 |
வெப்பநிலை | 6142 ± 118 கெ |
வேறு பெயர்கள் | |
SDSS J081554.26+472947.5, Gaia DR2 931227322991970560 | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எசுடிஎசெசு ஜோ81554.26+472947.5 (SDSS J081554.26+472947.5), பெரும்பாலும் அதன் பகுதி ஆயத்தொலைவுகளான ஜோ815+4729 என்று சுருக்கப்படுகிறது, இது புலி விண்மீன் குழுவில் உள்ள மிகக் குறைந்த பொன்மத்(உலோகத்)தன்மையைக் கொண்ட ஒரு விண்மீனாகும் . இது ஒப்பீட்டளவில் அதிகக் கரிமச் செறிவையும் கொண்டுள்ளது. [3] விண்மீனின் மேற்பரப்பு வெப்பநிலை 6,215 கெ. இது சூரியனில் இருந்து 7,500 ஒளி ஆண்டுகள் (2.3 கிலோபுடைநொடிகள் ) தொலைவில் உள்ளது மேலும் நம் பால்வழி மையத்தில் இருந்து 33,000 ஒளி ஆண்டுகள் (10 கிலோபடைநொடிகள்) தொலைவில் உள்ளது. [3] அதன் [ இரும்பு/நீரக] விகிதம் முதலில் -5.8 டெக்சுக்குக் கீழே இருப்பதாக நம்பப்பட்டது, இது இதுவ்வரை கண்டறியப்பட்ட குறைந்த உலோகத்தன்மை விண்மீனாக மாற்றப்பட்டது. , [3] ஆனால் 2020 இல் -5.49 டெக்சு என திருத்தப்பட்டது
ஜோ815+4729 கரிம/ இரும்பு விகிதம், [C/Fe] குறைந்தது 5.0 டெக்சு ஆகும். [3] இந்த விண்மீன் காலகத்தாலும் உயிரகத்தாலும் பெரிதும் செறிவூட்டப்பட்டுள்ளது, இது ஒற்றை சுழிய-உலோக சூப்பர்நோவாவால் மாசுபடுத்தப்பட்ட தொல்பழங்கால வளிம முகிலிலிருந்து உருவாகிறது. இரும்பு உள்ளிட்ட அடர்தனிமங்களின் பற்றாக்குறை, இவை பெரும்பாலும் சரிந்து விழும் மீவிண்மீன் வெடிப்பு எச்சங்கள் வழியாக விளக்கப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 வார்ப்புரு:Cite Gaia DR3
- ↑ 2.0 2.1 "SDSS J081554.26+472947.5". SIMBAD (Centre de données astronomiques de Strasbourg). http://simbad.u-strasbg.fr/simbad/sim-basic?Ident=SDSS+J081554.26%2B472947.5
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Aguado, David S; Hernández, Jonay I. González; Prieto, Carlos Allende; Rebolo, Rafael (2018). "J0815+4729: A Chemically Primitive Dwarf Star in the Galactic Halo Observed with Gran Telescopio Canarias". The Astrophysical Journal 852 (1): L20. doi:10.3847/2041-8213/aaa23a. Bibcode: 2018ApJ...852L..20A.