எக்ஸ்எம்எம்-நியூட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்சுஎம்எம்-நியூட்டன்
XMM-Newton
XMM-Newton.jpg
பொதுத் தகவல்கள்
மாற்றுப் பெயர்கள் மிகை உற்பத்தி எக்சு-கதிர் நிறமாலை திட்டம்
நிறுவனம்ஈசா
ஏவிய தேதி 10 டிசம்பர் 1999
ஏவுதளம் கயானா விண்வெளி மையம், கோரோ, பிரெஞ்சு கயானா, தென் அமெரிக்கா
ஏவுகலம் ஆரியான் 5
திட்டக் காலம் 23 ஆண்டுகள், 3 மாதங்கள்,  11 நாட்கள் இன்று வரை
திணிவு3800 கிகி
சுற்றுப்பாதை வகை நீள்வளைய ஒழுக்கு
சுற்றுப்பாதை உயரம் 7,000 - 114,000 கிமீ
சுற்றுக் காலம் 48 மணி
அலைநீளம்எக்சு-கதிர்
பெறும் பரப்பு 4300 செமீ²
குவியத் தூரம் 7.5 மீ
இணையத்தளம்
http://xmm.esac.esa.int
http://xmm.sonoma.edu/

எக்ஸ்எம்எம்-நியூட்டன் (XMM-Newton), அல்லது எக்சு-கதிர் பலகண்ணாடி திட்டம் - நியூட்டன் (X-ray Multi-Mirror Mission - Newton) என்பது சுற்றுப் பாதையில் சுழலும் ஒரு எக்சு-கதிர் வான் ஆய்வுக்கூடம் ஆகும். ஆரியான் 5 ராக்கட் ஒன்றின் மூலம் 1999 டிசம்பர் இல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) இதனை ஏவியது. இந்த செயற்கைக்கோள் ஐசாக் நியூட்டனைச் சிறப்பிக்கும் பொருட்டு அவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் இது மிகை உற்பத்தி எக்ஸ்ரே நிறமாலை திட்டம் (High Throughput X-ray Spectroscopy Mission) என்று அழைக்கப்பட்டது. 40° இல் ஒரு விசித்திரமான 48 மணி நீள்வட்டப் பாதையில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் புவிச்சேய்மைநிலை சுமார் 114,000 கிமீ (71,000 மைல்) ஆகவும் அண்மைப்புள்ளி வெறும் 7000 கிமீ (4,300 மைல்) ஆகவும் உள்ளது.

இந்த செய்மதி 3,800 கிலோ கிராம்கள் எடை கொண்டது(8,400 பவுண்டுகள்). 10 மீட்டர் (33 அடி) நீளமும் சூரிய மின் தகடுகள் நீட்டப்பட்டால் 16 மீட்டர் (52 அடி) அகலமும் உடையது. இச் செய்மதியில் மூன்று எக்ஸ்-கதிர் தொலைநோக்கிகள் இருக்கின்றன. இவை மீடியா லாரியோ என்கிற இத்தாலிய நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவை. இவை ஒவ்வொன்றிலும் 58 வோல்டர்-வகை குவிக்கப்பட்ட கண்ணாடிகள் இருக்கின்றன. இவற்றின் மொத சேகரிப்பு பரப்பு 4,300 சென்டிமீட்டர் அடுக்கு ரெண்டு ஆகும். இந்த மூன்று ஐரோப்பிய ஒளித்துகள் படமாக்கு கருவிகளும்(EPIC) சக்தி எல்லை 0.2 கேவ்லிருந்து 12 கேவ் வரை படம்பிடிக்கும் சக்தி கொண்டவை. இவற்றை தவிர இச்செய்மதியில் இரண்டு துருவும் அலைகருவிகளும் (grating spectrometers) உள்ளன. இவை ~2 கேவ்விற்கும் கீழ் உணர்வுதன்மை கொண்டவை. மேலும் 30 சென்டிமீட்டர்(12 இஞ்சுகள்) ஆரத்தில் ரிட்சே செரிடியன் ஒளி/புறஊதாக்கதிர்கள் தொலைநோக்கி ஒன்றும் உண்டு இந்த செய்மதியில்.

இத்திட்டம் 1984ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு 1985ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1993 ஆண்டு ஒரு திட்டக் குழு அமைக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டு ஒரு தயாரிப்பு பணிகள் துவக்கப் பட்டன. இந்த செய்மதி 1997ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் உருவாக்கப்பட்டு 1999ஆம் ஆண்டு செம்படம்பர் வரை சோதித்துப் பார்க்கப்பட்டது.