எஃப். ஆல்பர்ட் காட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்க் ஆல்பர்ட் காட்டன்
2005-ஆம் ஆண்டில் காட்டன்
2005-ஆம் ஆண்டில் காட்டன்
பிறப்பு (1930-04-09)ஏப்ரல் 9, 1930
பிலடெல்பியா, பென்சில்வேனியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புபெப்ரவரி 20, 2007(2007-02-20) (அகவை 76)
காலேஜ் ஸ்டேஷன், டெக்சாசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
குடியுரிமைஅமெரிக்கர்
Alma materஆர்வர்டு பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்ஜெஃப்ரி வில்கின்சன்[1]
முக்கிய மாணவர்ரிச்சர்டு எச். ஓல்ம், இசுடீஃபன் ஜெ. லிப்பர்டு, சார்லசு பி. ஆரிசு, டோபின் ஜெ. மார்க்சு, ஆங்-காய் (ஜோ) சோவ், ஜான். ஜெ. வைசு, வால்டர் ஜி. கிளெம்பெரெர்,ஜான். பி. ஃபேக்லெர், டாங் ரென், ரிச்சர்டு டி. ஆதம்சு

பிராங்க் ஆல்பர்ட் காட்டன் (Frank Albert Cotton) FRS (ஏப்ரல் 9, 1930 - பிப்ரவரி 20, 2007) [1] ஒரு அமெரிக்க வேதியியலாளர் ஆவார். இவர் டபிள்யு டி டோஹெர்டி-வெல்ச் அறக்கட்டளைத் தலைவராகவும், டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையின் புகழ்பெற்ற பேராசிரியராகவும் இருந்தார். இவர் 1600 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். எஃப். ஏ. காட்டன் தாண்டல் உலோகங்களின் வேதியியல் குறித்த ஆராய்ச்சிக்காக அங்கீகரிக்கப்பட்டார்.

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

எஃப் ஆல்பர்ட் காட்டன், ஏப்ரல் 9, 1930 அன்று பென்சில்வேனியாவின் பிலடெல்பியாவில் பிறந்தார். ஃபிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்செல் பல்கலைக்கழகம் மற்றும் பின்னர் டெம்பிள் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சேருவதற்கு முன்பு இவர் உள்ளூர் பொதுப் பள்ளிகளில் பயின்றார். 1951-ஆம் ஆண்டில் டெம்பிள் பல்கலையில் தனது இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, காட்டன் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் சர் ஜெஃப்ரி வில்கின்சன் [1] வழிகாட்டுதலின் கீழ் மெட்டலோசீன்களைப் பற்றிய முனைவர் பட்ட ஆய்வறிக்கை தயாரிக்க பணியாற்றினார்.[2] 1955 ஆம் ஆண்டில் இவர் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

தொழில்[தொகு]

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, காட்டன் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி) கற்பிக்கத் தொடங்கினார். 1961 ஆம் ஆண்டில், 31 வயதில், இந்நிறுவனத்தில் முழுமையான தகுதியுடன் பேராசிரியர் பதவியைப் பெற்ற இளைய நபர் ஆனார். இவரது பணி மின்னணு கட்டமைப்பு மற்றும் வேதித் தொகுப்பு இரண்டையும் வலியுறுத்தியது. இரீனியம் ஆலைடுகள் மீதான ஆராய்ச்சியில் தொடங்கி, இடைநிலை உலோக அணுக்களுக்கு இடையே பல்பிணைப்பு பற்றிய ஆய்வுக்கு இவர் முன்னோடியாக இருந்தார், [4] மேலும் 1964-ஆம் ஆண்டில் Re
2
Cl2−
8
அயனியில் நாற்பிணைப்பைக் கண்டறிந்தார். இவரது பணி விரைவில் மற்ற உலோக-உலோக பிணைப்பினங்கள் மீது கவனம் செலுத்தியது, [5] குரோமியம்(II) அசிடேட்டின் கட்டமைப்பை தெளிவுபடுத்தியது.

உலோக அணைவுகளின் விரிவான வேதியியலை தெளிவுபடுத்துவதற்கான ஒரு கருவியாக ஒற்றைப் படிக எக்சு கதிர் விளிம்பு விளைவுகளின் ஆரம்பகால ஆதரவாளராக இருந்தார்.

1962 ஆம் ஆண்டில் அவர் ஸ்டேஃபைலோகோகல் நியூக்ளியேசு நொதியின் படிக அமைப்பை ஆராயும் பணியை மேற்கொண்டார். [6] 1969-ஆம் ஆண்டில் 2Å தெளிவுத்திறனுக்கு தீர்வு காணப்பட்டு, 1971-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. [7] இந்தக் கட்டமைப்புகள் புரத தரவு வங்கியில் (PDB குறியீடு 1SNS) முதல் டஜன் புரதப் படிகங்களில் ஒன்றாக வைப்பு செய்யப்பட்டது.[8]

1972- ஆம் ஆண்டில்காட்டன் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்திற்கு ராபர்ட் ஏ. வெல்ச் வேதியியல் பேராசிரியராக மாறினார். அடுத்த ஆண்டு அவர் டோஹெர்டி-வெல்ச் வேதியியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு அமைப்பு மற்றும் பிணைப்புக்கான ஆய்வகத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார். [9] [10]

இறப்பு[தொகு]

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி, டெக்சாஸில் உள்ள காலேஜ் ஸ்டேஷனில், அக்டோபர் 2006 இல் விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயத்தின் சிக்கல்களால் இவர் இறந்தார். [11] இவர் 1959-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இவரது மனைவி, முன்னாள் டயான் டோர்னேச்சர் மற்றும் அவர்களது இரண்டு மகள்கள், ஜெனிஃபர் மற்றும் ஜேன் ஆகியோருடன் இருந்தார். [9] பிரேசோசு கவுண்டி செரீஃபின் துறை இவரது மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியது, அவரது மரணம் "சந்தேகத்திற்குரியது" என்று விவரித்தது. [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Chisholm, M. H.; Lord Lewis Of Newnham (2008). "Frank Albert Cotton. 9 April 1930 -- 20 February 2007". Biographical Memoirs of Fellows of the Royal Society 54: 95–115. doi:10.1098/rsbm.2008.0003.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "royalsoc" defined multiple times with different content
  2. Wilkinson, G.; Pauson, P. L.; Cotton, F. A. (1954). "Bis-cyclopentadienyl Compounds of Nickel and Cobalt". Journal of the American Chemical Society 76 (7): 1970–1974. doi:10.1021/ja01636a080. 
  3. Obituary in Current Science 92, 844 (25 March 2007)
  4. Bertrand, J. A.; Cotton, F. A.; Dollase, W. A. (1963). "The Metal-Metal Bonded, Polynuclear Complex Anion in CsReCl4". Journal of the American Chemical Society 85 (9): 1349–1350. doi:10.1021/ja00892a029. 
  5. Cotton, F. A.; Walton, R. A. "Multiple Bonds Between Metal Atoms" Oxford (Oxford): 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855649-7.
  6. "Crystalline extracellular nuclease of Staphylococcal nuclease". Journal of Biological Chemistry 241: 4389–4390. 1966. doi:10.1016/S0021-9258(18)99732-2. 
  7. Arnone, A.; Bier, C.J.; Cotton, F.A.; Day, V.W.; Hazen, E.E.; Richardson, D.C.; Richardson, J.S.; Yonath, A. (1971). "A High Resolution Structure of an Inhibitor Complex of the Extracellular Nuclease of Staphylococcus aureus". Journal of Biological Chemistry (Elsevier BV) 246 (7): 2302–2316. doi:10.1016/s0021-9258(19)77221-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9258. 
  8. "Studying and Polishing the PDB's Macromolecules". Biopolymers 99 (3): 170–82. Mar 2013. doi:10.1002/bip.22108. பப்மெட்:23023928. 
  9. 9.0 9.1 "Professor F Albert Cotton". The Daily Telegraph. 2007-03-02. https://www.telegraph.co.uk/news/obituaries/1544265/Professor-F-Albert-Cotton.html.  பிழை காட்டு: Invalid <ref> tag; name "telegraph" defined multiple times with different content
  10. "Internationally Prominent Chemist Dr. F. Albert Cotton Passed Away Tuesday At Age 76". Texas A&M University. 2007-02-21. http://tamunews.tamu.edu/2007/02/21/internationally-prominent-chemist-dr-f-albert-cotton-passed-away-tuesday-at-age-76/. 
  11. "Texas A&M chemist F. Albert Cotton dies at age 76". Houston Chronicle. 2007-02-20. https://www.chron.com/news/houston-deaths/article/Texas-A-M-chemist-F-Albert-Cotton-dies-at-age-76-1626629.php. 
  12. "Professor Cotton's death investigated". The Eagle. 2007-04-18. http://www.theeagle.com/news/a_m/professor-cotton-s-death-investigated/article_6ae94cde-757c-5674-a24b-bc7319a73281.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஃப்._ஆல்பர்ட்_காட்டன்&oldid=3833111" இலிருந்து மீள்விக்கப்பட்டது