உள்ளடக்கத்துக்குச் செல்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தேவனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

தேவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (Panchayat Union Middle School Devanur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி கொங்கனாபுரம் ஒன்றியம் தேவனூர் ஊராட்சியில் உள்ள ஒரு பள்ளியாகும். 1971 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதியன்று இப்பள்ளி தொடங்கப்பட்டது.

நிர்வாகம்

[தொகு]

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இப்பள்ளி செயல்படுகிறது. உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் இப்பள்ளியை நிர்வகிக்கிறார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் இங்கு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்

[தொகு]

இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மூன்று இடைநிலை ஆசிரியர்கள் பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.

கற்றல் கற்பித்தல் முறைகள்

[தொகு]

ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி முறையிலும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறையிலும் கற்றல் கற்பித்தல் இப்பள்ளியில் நடைபெறுகிறது.[1] விளையாட்டு வழிக் கல்வி, கணினி வழிக் கல்வி, உடற்கல்வி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் நன்னலக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]