ஊன்குருத்துக் கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊன்குருத்துக் கொடை (Mitochondrial donation) ஒரு சோதனைக்குழல் கருவுறுதல் வழி மகப்பேற்றின் சிறப்பு வடிவங்களில் ஒன்றாகும். இதில் பிறக்கப்போகும் குழந்தையின் ஊன்குருத்து மரபன் மூன்றாம் தரப்பில் இருந்து (தாயல்லாத மற்றொரு பெண்ணிடம் இருந்து) பெறப்படுகிறது. இக்கொடை இயலும் பல நுட்பங்களில் இரண்டு முறைகள் உள்ளன. அவை கலக்கணிக மாற்றம், குறுமவகக் கதிர் மாற்றம் என்பனவாகும். இவ்வகையில் பிறக்கும் குழந்தை மூன்று மரபுப் பெற்றோர்களைக் கொண்டமைவதால் மூன்று பெற்றோர் குழவி எனப்படுகிறது.[1][2][3] இது நீரிழிவு நோய், செவிடு, சில இதய, கணைய நிலைமைகள் போன்ற ஊன்குருத்து நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.[4] இது கணிசமான உயிர் அறவியல் சிக்கல்களைக் கொண்டுள்ளதால் இதுவரை பெரும்பிரித்தானியாவைத் தவிர வேறு எந்த நாடும் ஒப்புதல் அளிக்கவில்லை. பெரும்பிரித்தானியா 2015 இல் இம்முறையைச் சட்டப்படி ஏற்று ஒப்புதல் தந்துள்ளது.[5][6]

உயிர்க்கலக்கரு மாற்றக் குழந்தை (அலனா சாரினன்)[தொகு]

முதல் மூன்று பெற்றோர் குழவியான அலனா சாரினென் 2000ஆம் ஆண்டில் பிறந்த பெண்குழவியாகும். இவர் உயிர்க்கல ஊன்ம மாற்றமுறையில் பிறந்துள்ளார். இவர் மரபனை மூன்று பெற்றோர்களிடம் இருந்து பெற்றுள்ளார். இவர் சாரன், பால்சாரின்ன் இருவரின் குழந்தை மட்டுமல்ல; மூன்றாவதாக இவரது தாயின் நோயுற்ற ஊன்குருத்தை மாற்ற கொடையாக தன் ஊன்குருத்தைத் தந்த பெண்கொடையாளிக்கும் குழந்தையாகிறார். (என்றாலும் உயிர்க்கல மாற்றம்வழி 1997 இல் பிறந்த பெனிசில்வேனியா நகர எம்மா ஆட் என்பவரே முதலில் இப்படி பிறந்தவர் ஆவார்.)

சாரினன் பிறக்க, அதற்கு முன்பு இவரது பெற்றோர் வேறு நான்குவகை செயற்கைச் சோதனைக்குழல் கருத்தரிப்பு முறைகள்வழி முயற்சிகள் எடுத்துள்ளனர். அவை யாவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. ஐந்தாவதாக இந்த உயிர்க்கல ஊன்ம மாற்றமே வெற்றி தந்துள்ளது. இதில் மூன்றாமவரான ஒரு பெண் கொடையாளியின் உயிர்க்கலத்தில் இருந்து பெற்ற நலமான ஊன்குருத்து வாய்ந்த கல ஊன்மத்தைச் சாரான் அண்டத்தில் இணைத்ததே பயனளித்துள்ளது. இந்நுட்பம் சாரானின் உயிர்க்கலத்தின் கலக்கருவுக்கு மாற்றாக நலமான மூன்றாமவரின் கலக்கருவை மாற்றிடுவதால் இயல்கிறது. எனவே இம்முறை கலக்கரு மாற்றம் (Pronuclear transfer) எனவும் வழங்குகிறது. பிறகு இந்தக் கல ஊன்மம் மாற்றப்பட்ட அண்டம் சாரினனின் விந்துடன் சோதனைக் குழலில் கலந்து கருமுட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி மரபனை மாற்றும்போது 99% அளவுக்கு மரபன் பங்களிப்பு இருபெற்றோரிடம் இருந்தே பெற்றாலும் 1% அளவு மூன்றாமவரின் மரபன் கலந்ததே ஆகும். r.[7]

அவரது தாயின் கூற்றுப்படி, சாரினன் இப்போது பதினாட்டைப் பருவத்துக்குரிய இயல்பான பான்மையோடும் உடல்நலத்தோடும் இருக்கிறாள். அவள் நன்கு விலையாடுகிறாள்;ஆர்வத்தோடு இசையைக் கேட்கிறாள்;மீட்டுகிறாள்; நண்பர்களோடு பழகுகிறாள். சாரின்ன் வெற்றியோடு திகழினும் அமெரிக்க உணவு, மருந்து ஆட்சித் துறை உயிர்க்கல ஊன்ம மாற்றவழி ஊன்குருத்துக் கொடையை 2001 இல் பாதுகாப்பு, அறச்சிக்கல்கள் கருதித் தடைசெய்துள்ளது. முன்னோடியான இந்நேர்வைச் சுட்டிக் காட்டி பிரித்தானியா ஆய்வுக் குழுக்கள் இத்தகைய ஊன்குருது மாற்ற நுட்பத்துக்கு ஒப்புதல் கேட்டு 2015இலிதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளன. இது கொடையளியின் நலமான ஊன்குருத்தைத் தன் குழந்தைக்கு ஊன்குருத்து நோய்தர வாய்ப்புள்ள பெண்ணுக்கு மாற்றி வைக்கும்.[8]

அண்மைச் சட்டமாக்க நிலை[தொகு]

இது அமெரிக்காவிலும் சீனாவிலும் இது இன்னமும் ஆய்வுநிலையிலேயே உள்ளதால் பாதுகாப்பும் விளைவுறுதியும் கருதித் தடை செய்யப்பட்டுள்ளது.[9][10] ஆனால் அமெரிக்காவில் இந்த ஆய்வு தொடர்கிறது. ஆனால் பிரித்தானியா[4]முதல் நாடாக இவ்வழிமுறையை ஏற்று சட்டம் இயற்றியுள்ளது. இந்நாட்டின் பாராளுமன்றம் மாந்த கருவுறல், கருவியல் (ஊன்குருத்துக் கொடை) ஒழுங்குமுறைகள் எனும் சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[11] இது 2015 இல் சட்டமாக இயற்றப்பட்டு, அக்தோபர் 2015 இல் இருந்து பெரும்பிரித்தானிய நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.[12][13]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Keim, Brandon, Three-Parent Children: Reality or Technicality?, Feb 5, 2008.
  2. Alleyne, Richard.'Three parent babies' take a step closer to reality பரணிடப்பட்டது 2014-08-12 at the வந்தவழி இயந்திரம், The Telegraph, Nov. 12, 2009.
  3. Randerson, James. Scientists seek to create 'three-parent' babies The New Scientist Oct. 19. 2004
  4. 4.0 4.1 Three-Parent IVF Set to Go Ahead in Britain பரணிடப்பட்டது 2013-07-07 at the வந்தவழி இயந்திரம், Discover Magazine, June 28, 2013
  5. "UK approves three-person babies". BBC News (BBC). 24 February 2015 இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150331175305/http://m.bbc.co.uk/news/health-31594856. பார்த்த நாள்: 24 February 2015. 
  6. "Britain votes to allow world's first 'three-parent' IVF babies". Reuters. 3 February 2015 இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713225759/http://in.reuters.com/article/2015/02/03/us-health-babies-idINKBN0L710B20150203. பார்த்த நாள்: 3 February 2015. 
  7. "CNN.com – How far will couples go to conceive? - Mar 12, 2004".
  8. "BBC News – The girl with three biological parents". BBC News.
  9. Maxine, Frith (2003-10-14). "Ban on scientists trying to create three-parent baby". The Independent (UK). 
  10. "Now, a three-parent baby". Rediff. 14 October 2003.
  11. The Human Fertilisation and Embryology (Mitochondrial Donation) Regulations 2015 No. 572
  12. Knapton, Sarah (25 February 2015) "Three-Parent babies by next year after Lords change the law", The Daily Telegraph, Page 2; A similar article is available on Internet at [1], Retrieved 27 February 2015
  13. Gallagher, James (3 February 2015) MPs say yes to three-person babies BBC News health, Retrieved 3 February 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊன்குருத்துக்_கொடை&oldid=3706174" இலிருந்து மீள்விக்கப்பட்டது