ஊஞ்சல் (விளையாட்டு)
Jump to navigation
Jump to search
ஊஞ்சல் அல்லது ஊசல் (swing) என்பது ஒரு உல்லாசப் பொழுதுபோக்கு விளையாட்டு ஆகும். இது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்குநாட்டார் இதனைத் தூளி என்றும் தூரி என்றும் வழங்குகின்றனர். சிறுவர்கள் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவர். மரக்கிளைகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுவரும் சிறுமியரும் ஊஞ்சலாடுவர். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக்கொண்டும், பிறர் ஆட்டிவிட்டும் ஆடுவர்.
மேலும் பார்க்க[தொகு]
கருவிநூல்[தொகு]
- டாக்டர் அ பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், கபிலன் பதிப்பகம் சென்னை வெளியீடு, 1983
- டாக்டர் டி என் பெருமாள், தமிழக நாட்டுப்புறக் கலைகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980