ஊசிப்பாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஊசிப்பாலை என்பது உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் கீரை வகையைச்சேர்ந்த மூலிகை ஆகும். ஆக்ஸிஸ்டெல்மா செக்கோமோன் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அஸ்கலபிடேசியே குடும்பத்தை சேர்ந்த ஊசிப்பாலை , நெற்பயிர்கள் ஊடே களைச்செடியாக வளர்ந்து காணப்படும். இந்தக்கொடியில் பால் சாது நிறைந்து இருப்பதால் பாலை வார்க்தை சார்ந்தவகையாக கருதப்படுகின்றது. ஊசிப்பாலை கொடியில் ஆக்ஸிசின், எஸ்குலன்டின், கார்டினோலைட், ஆக்ஸிடெல்மோசைடு, ஆக்ஸிஸ்டெல்பின், போன்ற சத்துக்கள் செல்களில் நீர்ச்சத்தை நிலைநிறுத்தி வைத்து உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடல் உஷ்ணத்தால் தோன்றும் வாய்ப்புண் நீங்க இதன் இலைகளை மென்று சாப்பிடலாம். இதன் சாறு உடல் வறட்சியை போக்குகிறது. மேலும், சாதாரண கீரை வகைகளை போல் இதனை சமைத்து உண்பதால் உடல் வறட்சி நீங்கி ஆரோக்கியம் கிடைப்பதாக சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

[1] [2]

  1. http://www.tknsiddha.com/medicine/siddha-books-free/
  2. https://www.pinterest.com/pin/206813807859878138/
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிப்பாலை&oldid=3082808" இருந்து மீள்விக்கப்பட்டது