உவமைப்பித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உவமைப்பித்தன் (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது இயற்பெயர் பா. முனியமுத்து. முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் 19 கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் “உவமைக்காடு” எனும் நூல் இந்திய அரசு வங்கியின் மாநில முதல் பரிசு பெற்றது. இலக்கியப் பயணமாக, சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்குச் சென்றுள்ள இவர் 800க்கும் அதிகமான கவியரங்குகளில் பாடியிருப்பதுடன், 130க்கும் அதிகமான கவியரங்குகளுக்குத் தலைமை ஏற்றுள்ளார். ஈரோடு தமிழ்ச் சங்கப் பேரவையிலிருந்து “ஒட்டக்கூத்தர் விருது” பெற்றுள்ளார். இவர் எழுதிய "தமிழ்த்தாய் உவமை உலா" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உவமைப்பித்தன்&oldid=3614089" இருந்து மீள்விக்கப்பட்டது