உலோகக் கூரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போலந்து நாட்டில் உள்ள நாகத் தகடுகளிலான ஒரு கூரை.
இன்னொரு உலோகக் கூரை. பிரான்சில் உள்ளது.

உலோகக் கூரை (metal roof) என்பது, உலோகத் தகடு, உலோக ஓடுகள் போன்றவற்றினாலான கூரையைக் குறிக்கும். முற்காலத்தில் செப்பு, ஈயம் போன்ற உலோகங்கள் கூரைகளுக்குக் கூடுதலாகப் பயன்பட்டன. தற்காலத்தில் எஃகு, நாகம்பூசிய இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்கள் பெருமளவில் பயன்படுகின்றன. கூரைகளுக்கான உலோகத் தகடுகள் தட்டையானவையாக அல்லது நெளிதகடுகளாக இருக்கும். விறைப்பாக இருக்காது என்பதால், பெரிய தட்டையான தகடுகளைக் கூரைச் சட்டகத்தில் நேரடியாகத் தாங்க முடியாது. சட்டகத்தில் மரப் பலகைகளைத் தாங்க வைத்து அதன் மேல் உலோகத் தகடுகளைப் பொருத்துவர். தற்காலத்தில் பெரும்பாலும் நெளிதகடுகளாக இருப்பது வழக்கம். இத்தகடுகள் தொய்வடையாமல் சட்டகங்களின்மீது நேரடியாகவே பொருத்த முடியும். நெளிவுகள் உலோகத் தகட்டுக்கு விறைப்புத் தன்மையைக் கொடுக்கின்றன.

உலோகத் தகடுகள் கூடிய வெப்பம் கடத்துதிறன் கொண்டவை என்பதுடன், விரைவில் சூடாகவும் கூடியன ஆதலால், கடத்தல் மூலமாகவும், கதிர்வீச்சினாலும் பெருமளவு வெளிவெப்ப்ம் உள்ளே நுழைகின்றது. வெப்பக் காப்புப் பொருட்களை உலோகத் தகடுகளுக்குக் கீழே பொருத்துவதன் மூலம் உள்ளே நுழையக் கூடிய வெப்பத்தைப் பெருமளவு குறைக்க முடியும்.

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலோகக்_கூரை&oldid=2222080" இருந்து மீள்விக்கப்பட்டது