உள்ளடக்கத்துக்குச் செல்

உலூனா 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 

லூனா 6 அல்லது ஈ - 6 எண் 7 (Ye - 6 தொடர்) என்பது லூனா திட்டத்தின் ஒரு பகுதியாக நிலாவில் தரையிறங்கும் நோக்கில் ஏவியசோவியத் விண்கலமாகும். நடு வழித்தடத் திருத்த முறையின் தோல்வியின் காரணமாக உலூனா 6 தரையிறங்கத் தவறியது , அதற்கு பதிலாக 160,000 கிலோமீட்டர் (99,000 மைல்) தொலைவில் நிலாவைக் கடந்து பறந்தது.

ஏவுதல்

[தொகு]

பைக்கோனூர் ஏவுதளத்தில் தளம் 1/5 இலிருந்து பறக்கும் மோல்னியா - எம் ஏவூர்தியால் உலூனா 6 ஏவப்பட்டது. 1965 ஜூன் 8 அன்று 07:40 ஒபொநேவில் ஏவுதல் நிகழ்ந்தது. பிளாக் எல் மேல் கட்டப் பொறி விண்கலம் தாழ் புவி தங்கல் வட்டணையில் நுழைவதற்கு முன்பு , மேல் கட்ட விண்கலத்தை நிலாவைக் கடந்து சூரிய மைய வட்டணையில் செலுத்திவிட்டது.

தோல்வி

[தொகு]

ஜூன் 9 அன்று பிற்பகுதியில் திட்டமிடப்பட்ட நடுவழித் திருத்தம் வரை உலூனா 6 திட்டமிட்டபடி தொடர்ந்தது. விண்கலத்தின் எஸ்5ஏ முதன்மைப் பொறி சரியான நேரத்தில் பற்றவைக்கப்பட்ட போதிலும் , அது துண்டிக்கப்படாமல் , அதன் எரிபொருள் தீர்ந்துவிடும் வரை தொடர்ந்து எரியூட்டப்பட்டது. பின்னர் நடந்த ஆய்வில், மூட உத்தரவிட்ட கடிகைக்கு தவறாக அனுப்பப்பட்ட ஒரு கட்டளையால் இந்த சிக்கல் ஏற்பட்டது என்று தீர்மானிக்கப்பட்டது.[1]

விண்கலம் நிலவில் தரையிறங்க முடியவில்லை என்றாலும் , கட்டுப்பாட்டாளர்கள் விண்கலத்தைப் பயன்படுத்தி தரையிறங்கும் பணியை நிறைவாக நிறைவேற்றினர். உலூனா 6 நிலாவைக் கடந்து ஜூன் 11 அன்று 159,612,8 கிலோமீட்டர் (99,178,8 மைல்) நெருக்கத்தில் பறந்தது.[2] புவியிலிருந்து 600,000 கிலோமீட்டர் (370,000 மைல்) தொலைவுக்குத் தொடர்பு பேணப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zak, Anatoly. "Russia's Unmanned Missions". Russian Space Web. பார்க்கப்பட்ட நாள் 2 December 2016.
  2. NASA. "Luna 6". NASA. பார்க்கப்பட்ட நாள் 2 December 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலூனா_6&oldid=3788243" இலிருந்து மீள்விக்கப்பட்டது