உள்ளடக்கத்துக்குச் செல்

உலுத்விகைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலுத்விகைட்டு
Ludwigite
அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள சால்ட்டு லேக்கு மாகாணத்தில் கிடைத்த 0.5 செ.மீ வரை பளபளப்பான, கருப்பு, உலோக, ஊசிவடிவ உலுத்விகைட்டு படிகங்களின் ஆரப்போக்குத் திரட்டுகள்
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMg2Fe3+BO5
இனங்காணல்
மோலார் நிறை195.26 கி/மோல்
நிறம்கரிப்பிசின்-கருப்பு, ஆலிவ் கருப்பு
படிக இயல்புதிரட்சி - நாரிழை
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு[001] சரிபிளவு
முறிவுநொறுங்கும் – சங்குருவம் – Very brittle fracture producing small, conchoidal fragments.
மோவின் அளவுகோல் வலிமை5.5
மிளிர்வுபட்டும் துணை உலோகத் தன்மையும்
கீற்றுவண்ணம்பசுமை கலந்த கறுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது, மெல்லிய துண்டுகளில் ஒளி கசியும்
ஒப்படர்த்தி3.6 – 3.8
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.830 – 1.850 nβ = 1.830 – 1.850 nγ = 1.940 – 2.020
இரட்டை ஒளிவிலகல்δ = 0.110 – 0.170
பலதிசை வண்ணப்படிகமைX = Y = அடர் பச்சை; Z = அடர் செம்பழுப்பு
2V கோணம்அளக்கப்பட்டது: 20° to 45°
கரைதிறன்அமிலங்களில் மெல்ல கரையும்
Alters toஇலிமோனைட்டு
மேற்கோள்கள்[1][2]

உலுத்விகைட்டு (Ludwigite) என்பது Mg2FeBO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும். மக்னீசியம்-இரும்பு போரேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் உலுத்விகைட்டு கனிமத்தை Ldw[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

உலுத்விகைட்டு பொதுவாக மெக்னீசியன் இரும்பு கலந்த கரடுமுரடான் உருமாறிய பாறைகளிலும் பிற உயர் வெப்பநிலை தொடர்புள்ள உருமாற்ற படிவுகளிலும் காணப்படுகிறது. மேக்னடைட்டு, பார்சுடரைட்டு, கிளினோகூமைட்டு மற்றும் போரேட்டுகளான வான்செனைட்டு மற்றும் சைபெலைட்டு கனிமங்களுடன் இணைந்து காணப்படுகிறது.[2] இரும்பு(II)-இரும்பு(III) போரேட்டு கனிம வான்செனைட்டுடன் உலுத்விகைட்டு ஒரு திண்ம கரைசல் தொடரை உருவாக்குகிறது.[1]

முதன்முதலில் 1874 ஆம் ஆண்டில் தென்மேற்கு உருமேனியாவிலுள்ள காரசு-செவெரின் மாகாணம் ஓக்னா தி பியர் பகுதியிலும், பனாட்டு மலைத் தொடர்களிலும் கண்டறியப்பட்டது. வியன்னா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஆத்திரிய வேதியியலாளர் எர்னசுட்டு உலுத்விக்கு (1842-1915) நினைவாக கனிமத்திற்கு உலுத்விகைட்டு பெயரிடப்பட்டது.[1]

பாக்கித்தானின் கோகிசுத்தான் மாவட்டத்தில் சபட் காலி பகுதியில் கிடைக்கும் பெரிடோட்டு படிகத்தில் கூட்டுச் சேர்க்கைகளாக உலுத்விகைட்டு ஊசிகள் மற்றும் தெளிப்புகள். அளவு :2.8 x 2 x 1.1 செ.மீ.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Ludwigite on Mindat.org
  2. 2.0 2.1 Handbook of Mineralogy
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலுத்விகைட்டு&oldid=4112495" இலிருந்து மீள்விக்கப்பட்டது