உலக இளையோர் நாள் 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
XXIX உலக இளையோர் நாள்
நாள் 25 - 31 ஜூலை 2016
இடம் Kraków, போலந்து
கருப்பொருள் "இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்." (மத் 5:8)


உலக இளையோர் நாள் 2016 என்பது கத்தோலிக்க திருச்சபை இளையோரை மையப்படுத்தி 2016ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் உலக அளவில் கொண்டாடுகின்ற ஒரு சமய நிகழ்ச்சி ஆகும். ஒரு வாரம் நீடிக்கின்ற இந்த சமய நிகழ்ச்சி போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்று பிரேசிலின் ரியோ டி ஜனேரோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் 2013-ன் போது திருத்தந்தை பிரான்சிசு 2013, சூன் 28ஆம் நாள் அறிவித்தார்.

திருத்தந்தை வழங்கிய அறிவிப்பு[தொகு]

திருத்தந்தை போலந்தில் உலக இளையோர் நாள் 2016 நடக்கும் என அறிவித்த போது போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்த காட்சி

ரியோ டி ஜனேரோவில் நிகழ்ந்த உலக இளையோர் நாள் 2013 கொண்டாட்டத்தின் இறுதி நாளாகிய 2013, சூன் 28ஆம் நாள் சுமார் 3 மில்லியன் மக்கள் பங்கேற்புடன் நடந்த திருப்பலியின்போது திருத்தந்தை இந்த அறிவிப்பை வழங்கினார். இச்செய்தியைக் கேட்டதும், கூட்டத்திற்கு வந்திருந்த போலந்து நாட்டுத் திருப்பயணிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

கிராக்கோவ் பேராயர் அறிக்கை[தொகு]

அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டம் போலந்தின் கிராக்கோவ் நகரில் நிகழும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் கிராக்கோவ் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ஜீவிஸ் en:Stanislaw Dziwisz "அடுத்த உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தை கிராக்கோவில் நடத்துவது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இது எங்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் மரியாதையும் பொறுப்பும் ஆகும்" என்று கூறினார்.

மேலும், போலந்து நாட்டில் கிறித்தவம் அறிமுகம் ஆன 1050ஆம் ஆண்டாகிய 2016இல் இளையோர் கொண்டாட்டம் நிகழப்போவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் தொடங்கிய நிகழ்ச்சி[தொகு]

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலில் பிறப்பு நாடாகிய போலந்தில், அதுவும் அவர் பேராயராகப் பணிபுரிந்த கிராக்கோவ் மறைமாவட்டத்தில் உலக இளையோர் நாள் 2016 நிகழவிருப்பதும், அத்திருத்தந்தையின் செயலராகப் பணியாற்றிய கர்தினால் ஜீவிஸ் தற்போது கிராக்கோவில் பேராயராகப் பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கன.

உலக இளையோர் நாள் என்னும் கொண்டாட்டத்தை கத்தோலிக்க திருச்சபையின் முக்கியதொரு நிகழ்ச்சியாக 1984இல் தொடங்கிவைத்தவர் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்தான். போலந்து நாட்டில் முதன்முறையாக உலக இளையோர் நாள் 1991ஆம் ஆண்டு செஸ்டகோவா en:Czestochcowa நகரில் நிகழ்ந்தது. அதில் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் பங்கேற்றார்.

ஆதாரம்[தொகு]

கிராக்கோவில் உலக இளையோர் நாள் 2016

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_இளையோர்_நாள்_2016&oldid=1838091" இருந்து மீள்விக்கப்பட்டது