உலகமாதேவிப்பட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகமாதேவிப்பட்டினம் என்பது பாண்டியர் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களுள் ஒன்று. இது கி.பி. 875 - 1368 வரை அதிகம் அறியப்பட்டத் துறைமுகமாக விளங்கிற்று. முற்காலப் பாண்டியர் காலத்தில் இது இளங்கோமங்கலம் எனவும் அக்காலத்தில் இது அகநாடுகளுள் ஒன்றான செவ்விருக்கை நாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்தது. தற்போது இது திருவாடானை வட்டம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. இதன் பெயர் பாண்டியனின் மனைவியின் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.[1] இன்று தேவிப்பட்டினம் என்றழைக்கப்படும் இவ்வூர் முன்பு உலகமாதேவிப்பட்டினம் என்றழைக்கப்பட்டதாக 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் உள்ளது.[2]

மூலம்[தொகு]

  • பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினங்கள், வணிகத் தொடர்புகள் (கி.பி. 600-1400), வெ.வேதாச்சலம், மதுரை.

மேற்கோள்கள்[தொகு]

  1. பா. ஜெயக்குமார் (1992). கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படும் சில பாண்டிநாட்டுத் துறைமுகப்பட்டினங்கள். தமிழகத் தொல்லியல் கழகம். பக். பப 80-83. 
  2. தென் இந்திய கல்வெட்டுகள் 8/404

உசாத்துணை[தொகு]

  • தமிழகக் கடல்சார் ஆய்வுகள், ந. அதியமான் மற்றும் பா. ஜெயக்குமார், தமிழ்ப் பல்க்லைக்கழகம், தஞ்சாவூர், நவம்பர் 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகமாதேவிப்பட்டினம்&oldid=1291712" இருந்து மீள்விக்கப்பட்டது