உறுகுணை பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உறுகுணை பல்கலைக்கழகம் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தின் சில இடங்களிலும் காலியிலும் அமைந்துள்ளது. 1978 இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது 7 பீடங்களைக் கொண்டுள்ளது.

சரித்திரம்[தொகு]

தென்னிலங்கை மக்களின் அபிலாசையான தெற்கில் ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்காக இலங்கை அதிபரின் ஆணைப்படி செப்தெம்பர் 1, 1978 இல் தொடங்கப்பட்டது.

இது இன்றுவரை 10,000 இற்கு மேற்பட்ட பல்கலைக்கழகப் பட்டதாரிகள், 75 மேற்பட்ட பட்டப்பின் பட்டதாரிகளை உருவாக்கியதோடு தற்போது பல்வேறு துறைகளில் 100இற்கு மேற்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களையும் கொண்டுள்ளது.

பீடங்கள்[தொகு]

  • விவசாய பீடம்
  • பொறியியற் பீடம்
  • மீன்பிடி மற்றும் கடல் சார் தொழில் நுட்பம்
  • சமூகவிஞ்ஞானம்
  • நிதி மற்றும் நிர்வாக பீடம்
  • மருத்துவ பீடம்
  • விஞ்ஞான பீடம்

இது இலங்கையில் பெரிய பேராதனைப் பல்கலைக் கழகம் போன்று 7 பீடங்களைக் கொண்டுள்ளது.

இதன் பிரதான வளாகமானது மாத்தறை நகரின் வெல்லமடமவில் அமைந்துள்ளது. இதன் விவசாய பீடம் கம்புறுப்பிட்டியில் அமைந்துள்ளது பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்கள் காலியின் கராப்பிட்டிய, மாப்பலான ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.