உருவார பொம்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருவார பொம்மை என்பது களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு உருவாக்கப்படுகின்றது. ஆண், பெண், குழந்தை, ஆடு, மாடு, நாய், குதிரை போன்றவற்றினை பொம்மைகளாக உருவாக்குகின்றனர். பக்தர்கள் இந்த உருவார பொம்மைகளை கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபாடு செய்கின்றனர். [1] இந்த உருவார பொம்மைகளை உருவாரம் எனவும் அழைக்கின்றனர்.

நேர்த்திக்கடன் வழிபாடு[தொகு]

கால்நடைகளுக்கு உடல்நலம் சரியில்லாத போதும், உறவினர்கள் குடும்பத்திலுள்ளோர்களுக்கு உடல்நலம் சரியில்லாத போதும் நாட்டார் தெய்வங்களிடம் உருவாரம் செய்து வைப்பதாக வேண்டிக்கொள்கின்றனர். உடல்நலம் சரியானதும் உருவார பொம்மையை வாங்கி கோயிலில் வைக்கின்றனர். இதனை உருவாரம் எடுத்தல் என்கின்றனர்.

களிமண்ணால் செய்த சுடுமண் குதிரையை அலங்கரித்து எடுத்து செல்லும் சடங்கு நாட்டார் தெய்ய வழிபாட்டில் உள்ளது. சாத்தன், ஐயனார் கோயில்களில் இந்த சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனை புரவியெடுப்பு அல்லது குதிரையெடுப்பு என்று அழைக்கின்றனர்.

உருவாரம் தயாரிப்பு முறை[தொகு]

அரசின் அனுமதியோடு குளம், ஏரியிலிருந்து களிமண்ணை எடுக்கின்றனர். களிமண்ணால் கால்நடைகளின் உருவங்களை வடிவமைத்துவெயிலில் காய வைக்கின்றனர். காய்ந்த பொம்மைகளை தீயிலிட்டு சுடுகின்றனர். அதன்பின் பொம்மைகளுக்கு வண்ணங்கள் தீட்டப்படுகிறது. [2]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மலர், மாலை (27 திசம்பர் 2022). "உருவார பொம்மை தயாரிக்கும் பணி மும்முரம்". Maalaimalar.
  2. "கோவிலுக்கு செலுத்தும் உருவாரம் தயாரிப்பு தீவிரம் பொங்கலுக்கு பிசியான மண்பாண்ட தொழிலாளர்கள் - Dinamalar Tamil News". Dinamalar.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவார_பொம்மை&oldid=3764693" இலிருந்து மீள்விக்கப்பட்டது