உருசியாவில் போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உருசியாவின் போக்குவரத்து வலையமைப்பு, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்பில் ஒன்றாகும். சாலைகள், தொடர்வண்டிப் பாதைகள் மற்றும் வான்வழிகளின் வலையமைப்பானது மேற்கின் கலிநிக்கிரட்டிலிருந்து கிழக்கின் கம்சாத்கா தீபகற்பம் வரை சுமார் 7,700 km (4,800 mi) அளவுக்குப் பரந்து காணப்படுகின்றது. முக்கிய நகரங்களான மாஸ்கோ மற்றும் சென் பீட்டர்ஸ்பேர்க் ஆகியன பாரிய விரைவுப் போக்குவரத்து முறைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அண்மைய காலங்களில் உருசியாவானது இரண்டு புதிய போக்குவரத்து உத்திகளை முன்மொழிந்துள்ளது. முதலாவது 2020 ஆம் ஆண்டுவரைக்கும், இரண்டாவது 2030 ஆம் ஆண்டுவரைக்குமான காலத்தை எடுக்கும்.உருசியாவின் போக்குவரத்தால் கிடைக்கும் உற்பத்தியானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

தொடர்வண்டிப் போக்குவரத்து[தொகு]

உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொடர்வண்டிப் போக்குவரத்து வலையமைப்பை உருசியா கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தொடர்வண்டிப் போக்குவரத்து வலையமைப்பானது அமெரிக்காவுக்கு இருக்கின்றது.[1] 2011 ஆம் ஆண்டின்படி உருசியாவின் தொடர்வண்டிப் பாதைகளின் மொத்தநீளம் 87,157 கிலோமீட்டர்கள் (54,157 mi) ஆகும். 2007 ஆம் ஆண்டில் உருசிய தொடர்வண்டிகள் தனியாக 1.3 பில்லியன் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவியுள்ளன.[2] மற்றும் 1.3 பில்லியன் சரக்குகளையும் நகர்த்தியுள்ளன.[3]

அதிவேக தொடர்வண்டிகள்[தொகு]

 • மாஸ்கோ மெட்ரோ – 12 வழிகள் , 196 நிலையங்கள் , 327.5 km
 • புனித பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ – 5 வழிகள் , 67 நிலையங்கள் , 113.2 km
 • நோவோசிபெர்க் மெட்ரோ – 2 வழிகள் , 13 நிலையங்கள் , 15.9 km
 • நிச்னி நோகொரோத் மெட்ரோ – 2 வழிகள் , 14 நிலையங்கள் , 18.8 km
 • சமர மெட்ரோ – 1 வழி, 10 நிலையங்கள் , 12.7 km
 • எகடேரின்பேர்க் மெட்ரோ– 1 வழி, 9 நிலையங்கள் , 12.7 km
 • கசன் மெட்ரோ – 1 வழி, 10 நிலையங்கள் , 15.8 km

சாலைகளும் நெடுஞ்சாலைகளும்[தொகு]

2003 ஆம் ஆண்டின் படி உருசியாவின் சாலைகளின் மொத்த நீளம் 933,000 கிமீ [4] உருசியாவில் சாலைப் பாதுகாப்பானது கவலைக்குரிய நிலையில் உள்ளது. உருசியாவில் மில்லியன் மக்கள் தொகையில் வீதி விபத்துக்களால் இறக்கும் மக்களின் அளவு ஜி8 மற்றும் பிரிக் நாடுகளின் அளவைவிட மிக அதிகமாக உள்ளது. உருசியாவின் சாலைகளில் பயணிப்பதால் எதிர்கொள்ளவேண்டிய சவால்களைக் கணக்கில் எடுத்தால் (எ-கா:- ஒரு பயணத்தின்போது ஏற்படும் விபத்துக்கள்), அது ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்பிலும் பார்க்க 60 மடங்கு பெரியதாய் இருக்கும்.[5] மிகப்பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கியும் சாலைகளின் அடர்த்தியானது அனைத்து ஜி8 மற்றும் பிரிக் நாடுகளை விடவும் குறைந்த அளவில் உள்ளது.[5]

 1. Railway line length of various countries (உருசிய மொழியில்)
 2. Table 2.28. ПЕРЕВОЗКИ ПАССАЖИРОВ И ПАССАЖИРООБОРОТ ЖЕЛЕЗНОДОРОЖНОГО ТРАНСПОРТА ОБЩЕГО ПОЛЬЗОВАНИЯ; TRANSPORTATION OF PASSENGERS AND PASSENGER TURNOVER OF PUBLIC RAILWAY TRANSPORT Основные показатели транспортной деятельности в России - 2008 г. Copyright © Федеральная служба государственной статистики
 3. Table 2.25. ПЕРЕВОЗКИ ГРУЗОВ И ГРУЗООБОРОТ ЖЕЛЕЗНОДОРОЖНОГО ТРАНСПОРТА ОБЩЕГО ПОЛЬЗОВАНИЯ TRANSPORTATION OF CARGO AND FREIGHT TURNOVER OF PUBLIC RAILWAY TRANSPORT Основные показатели транспортной деятельности в России - 2008 г. Copyright © Федеральная служба государственной статистики
 4. Rosstat statistics on length of roads Retrieved on 10 June 2009
 5. 5.0 5.1 "Transport in Russia". International Transport Statistics Database. iRAP. பார்த்த நாள் 17 February 2009.[தொடர்பிழந்த இணைப்பு]