உருசியாவின் முதலாம் பவுல்
முதலாம் பவுல் Paul I | |||||
---|---|---|---|---|---|
முதலாம் பவுலின் உருவ ஓவியம் (1800 இல் விளாதிமிர் பரவிக்கோவ்சுக்கி வரைந்தது) | |||||
உருசியப் பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | 17 நவம்பர் 1796 – 23 மார்ச் 1801 | ||||
முடிசூடல் | 5 ஏப்ரல் 1797 | ||||
முன்னையவர் | இரண்டாம் கேத்தரின் | ||||
பின்னையவர் | முதலாம் அலெக்சாந்தர் | ||||
பிறப்பு | 1 அக்டோபர் [யூ.நா. 20 செப்டம்பர்] 1754 சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு | ||||
இறப்பு | 23 மார்ச்சு 1801 புனித மைக்கேல் அரண்மனை, சென் பீட்டர்ஸ்பேர்க் | (அகவை 46)||||
புதைத்த இடம் | பீட்டர், பவுல் பேராலயம் | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் #வாரிசுள் |
| ||||
| |||||
தந்தை | உருசியாவின் மூன்றாம் பீட்டர் | ||||
தாய் | உருசியாவின் இரண்டாம் கத்தரீன் | ||||
கையொப்பம் |
முதலாம் பவுல் (Paul I, உருசியம்: Па́вел I Петро́вич; பாவெல் பெத்ரோவிச்; 1 அக்டோபர் [யூ.நா. 20 செப்டம்பர்] 1754 – 23 மார்ச் [யூ.நா. 11 மார்ச்] 1801) உருசியப் பேரரசராக 1796 முதல் 1801 வரை ஆட்சியில் இருந்தவர். பேரரசர் மூன்றாம் பீட்டர், உருசியாவின் இரண்டாம் கத்தரீன் ஆகியோரின் ஒரே மகனாக அதிகாரபூர்வமாக அறியப்படும் முதலாம் பவுல், தனது காதலர் செர்கே சால்த்திகோவ் மூலம் பிறந்ததாக கேத்தரின் கூறுவார்.[1]
பவுல் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனது தாய் கேத்தரீனால் வெளியுலகிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பவுலின் ஆட்சி நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவரது சதிகாரர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் உருசியப் பேரரசின் சிம்மாசனத்திற்கு அடுத்தடுத்த வாரிசுகளை ஏற்றுக் கொள்ளுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இச்சட்டம் உருசியப் பேரரசின் முடிவு வரை (ரொமானொவ் வம்சம்) அமுலில் இருந்தது. இவர் பிரெஞ்சுப் புரட்சிப் போர்களிலும் தலையிட்டார். இவரது ஆட்சியின் முடிவில், கிழக்கு சியார்சியாவின் உள்ள கார்ட்லி-கக்கேதி இராச்சியங்களை உருசியப் பேரரசுடன் இணைத்தார். இது அவரது மகனும் வாரிசுமான முதலாம் அலெக்சாந்தரால் உறுதிப்படுத்தப்பட்டது.
படுகொலை
[தொகு]பவுலின் படுகொலை பற்றிய முன்னறிவுகள் நன்கு அறியப்பட்டிருந்தன. ஒரு பிரமாண்டமான நெறிமுறையைப் பின்பற்ற பிரபுக்களை கட்டாயப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் அவரது நம்பகமான ஆலோசகர்களில் பலரை அவரிடம் இருந்து அந்நியப்படுத்தின. உருசியக் கருவூலத்தில் பாரிய சூழ்ச்சிகளையும் ஊழல்களையும் பேரரசர் கண்டுபிடித்தார். தொழிலாள வர்க்கத்தினருக்கு உடல் ரீதியான தண்டனையை அனுமதிக்கும் கேத்தரின் சட்டத்தை அவர் இல்லாதொழித்தார், விவசாயிகளுக்கு அதிக உரிமைகளை விளைவிக்கும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பண்ணையடிமைகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்கியபோதும், அவருடைய பெரும்பாலான கொள்கைகள் மேல் வர்க்கத்திற்கு பெரும் எரிச்சலூட்டின. இதன் மூலம் ஒரு செயல் திட்டத்தை உருவாக்க அவரது எதிரிகளைத் தூண்டியது.
செயிண்ட் பீட்டர்சுபர்கில் பெரிய பிரித்தானியாவின் பிரதிநிதி சார்லசு விட்வொர்த் என்பவரின் உதவியுடன்,[2] படுகொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பிரபுக்கள் பீட்டர் பாலென், நிக்கித்தா பானின், அட்மிரல் டி ரிபாசு ஆகியோரினால் இதற்கான திட்டம் தீட்டப்பட்டது. 1800 திசம்பரில் டி ரிபாசின் இறப்பு இப்படுகொலையை தாமதப்படுத்தியது, ஆனாலும், 1801 மார்ச் 23 இரவு [பழைய நாட்காடி: 11 மார்ச்], பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழு ஒன்று புதிதாகக் கட்டப்பட்ட புனித மைக்கேல் கோட்டையில் பவுலை அவரது படுக்கையறையில் வைத்துக் கொலை செய்தது. கொலையாளிகளில் உருசிய சேவையில் ஈடுபட்டிருந்த அனோவரைச் சேர்ந்த ஜெனரல் பென்னிக்சன், சியார்சியாவைச் சேர்ந்த ஜெனரல் யாசுவில் ஆகியோரும் அடங்குவர்.
கொலையாளிகள் பவுல் படுக்கையறைக்குள் நுழைந்து, அவருடன் ஒன்றாக இருந்து உணவருந்தியபின் அவருக்கு மதுபானத்தைப் பருக்கினர்.[3] பின்னர் அவரை பதவி விலகலில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்த முயன்றனர். பவுல் சிறிது எதிர்ப்பை முன்வைத்தார். ஜெனரல் நிக்கொலாய் சூபொவ் அவரை ஒரு வாளால் தாக்கினார், அதன் பின்னர் கொலையாளிகள் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலை நடந்த நேரத்தில், உருசியப் பேரரசுக்கான பவுலின் வாரிசான அவரது மகன், 23 வயதான அலெக்சாந்தர், அரண்மனையில் இருந்தார். ஜெனரல் சுபோவ் வாரிசுக்கான தனது அறிவிப்பை அலெக்சாந்தருக்கு அறிவித்தார், "இது வளருவதற்கான நேரம்! போய் ஆட்சி செய்!" அன அவர் அலெக்சாந்தருக்குக் கட்டளையிட்டார். அலெக்சாந்தர் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை. நீதிமன்ற மருத்துவர் யேம்சு வைலி, மரணத்திற்கான அதிகாரபூர்வமான காரணம் "மூளை இரத்தக் கசிவு" என்று அறிவித்தார்.[4][5]
வாரிசுகள்
[தொகு]பவுல், சோஃபி ஆகியோருக்கு 10 பிள்ளைகள்; இவர்களில் ஒன்பது பேரின் வழியாக 19 பேரப்பிள்ளைகள் பிறந்தனர்.
பெயர் | பிறப்பு | இறப்பு | குறிப்புகள் |
---|---|---|---|
பேரரசர் முதலாம் அலெக்சாந்தர் | 12 திசம்பர் 1777 | 19 நவம்பர் 1825 | திருமணம்: பாடென் இளவரசி எலிசபெத் அலெக்சியேவ்னா (1779–1826), இவர்களுக்கு இரண்டு மகள்மார், இருவரும் இளமையிலேயே இறந்து விட்டனர். |
இளவரசர் கான்சுடன்டீன் | 27 ஏப்ரல் 1779 | 15 சூன் 1831 | திருமணம். முதல்: சாக்சி-கோபர்க்-சால்ஃபெல்ட் இளவரசி யூலியான் (அன்னா பியோதரவ்னா);[6] இரண்டாவது: யொவான்னா குரூத்சின்சுக்கா. யொவான்னாவுடன் ஒரு பிள்ளை: சார்லசு (பி. 1821), 3 சட்டபூர்வமற்ற பிள்ளைகள்: பவுல் அலெக்சாந்திரொவ்; கான்சுடன்டீன், கான்சுடன்சு. |
இளவரசி அலெக்சாந்திரா பாவ்லொவ்னா | 9 ஆகத்து 1783 | 16 மார்ச் 1801 | தி. அங்கேரியின் யோசப் (1776–1847), ஒரு பிள்ளை (மகள் பிறந்தவுடன் தாயும் மகளும் இறந்து விட்டனர்.) |
இளவரசி எலேனா பாவ்லொவ்னா | 13 திசம்பர் 1784 | 24 செப்டம்பர் 1803 | தி. மாக்கென்பர்க்-சுவெரின் இளவரசர் பிரெட்ரிக் லூயி (1778–1819), இரண்டு பிள்ளைகள். |
இளவரசி மரியா பாவ்லொவ்னா | 4 பெப்ரவரி 1786 | 23 சூன் 1859 | தி. சாக்சி-வைமர்-ஐசினாக் இளவரசர் சார்லசு பிரெட்ரிக் (1783–1853), நான்கு பிள்ளைகள். |
இளவரசி கேத்தரின் பாவ்லொவ்னா | 21 மே 1788 | 9 சனவரி 1819 | தி. ஓல்டன்பர்க் இளவரசர் கியார்க் (1784–1812), இரு மகன்கள். இரண்டாவது: ஊட்டம்பர்க் மன்னர் முதலாம் வில்லியம் (1781–1864), இரண்டு மகள்கள். |
இளவரசி ஒல்கா பாவ்லொவ்னா | 22 சூலை 1792 | 26 சனவரி 1795 | |
இளவரசி அன்னா பாவ்லொவ்னா | 7 சனவரி 1795 | 1 மார்ச் 1865 | தி. நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம் (1792–1849), ஐந்து பிள்ளைகள். |
முதலாம் நிக்கலாசு, உருசியப் பேரரசர் | 25 சூன் 1796 | 18 பெப்ரவரி 1855 | தி. புருசிய இளவரசி சார்லொட் (அலெக்சாந்திரா பியோதரொவ்னா) (1798–1860), 10 பிள்ளைகள். |
இளவரசர் மைக்கேல் பாவ்லொவிச் | 8 பெப்ரவரி 1798 | 9 செப்டம்பர் 1849 | தி. ஊட்டம்பர்க் இளவரசி சார்லொட் (எலேனா பாவ்லொவ்னா) (1807–1873), ஐந்து பிள்ளைகள். |
காட்சியகம்
[தொகு]-
முதலாம் பவுலின் குடும்பம்
-
சிறுவனாக பவுல் (1761)
-
பவுல் இளமைக் காலத்தைக் கழித்த காத்சினா அரண்மனையின் அறை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zagare, Liena (2005-08-18). "Dangerous Liaisons". The New York Sun: p. 15 இம் மூலத்தில் இருந்து 2016-03-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160301081350/http://www.nysun.com/arts/dangerous-liaisons/18801/. "[...] it is very strongly suggested, that the later Romanovs were not, in fact, Romanovs."
- ↑ Newton, Michael (2014). "Paul I of Russia (1754-1801)". Famous Assassinations in World History: An Encyclopedia. Vol. 1. Santa Barbara, California: ABC-CLIO. p. 411. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781610692861. பார்க்கப்பட்ட நாள் 2019-05-27.
The plot's mastermind was Count Nikolay Alexandrovich Zubov [...]. [...] Count Zubov hatched the conspiracy with Count Peter Alekseyevich Pahlen [...]. Allegedly financed by Zubov's sister, Olga Zherebetsova, with funds procured from her lover - Charles Whitworth, 1st Earl Whitworth, Britain's envoy-extraordinary and minister-plenipotentiary at St. Petersburg under Catherine - the conspirators recuited others.
- ↑ Radzinsky, Edvard. Alexander II, The last great tsar Freepress, 2005. Pages 16–17.
- ↑ Marbot, Jean. (Oliver C. Colt, trans.) The Memoirs of General the Baron de Marbot, Volume 2, Chapter 3 "The intrigues of Count Czernicheff"
- ↑ Hutchison, Robert. "A Medical Adventurer. Biographical Note on Sir James Wylie, Bart., M.D., 1758 to 1854." Proceedings of the Royal Society of Medicine, 06/1928; 21(8):1406.
- ↑ "Royal Russia - The Romanov Dynasty: The Grand Dukes of Russia". Angelfire.com. Archived from the original on 2013-01-17. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- Emperors and Empresses of Russia: Paul I
- Alexanderpalace.org
- Tsar Paul and the Question of Madness by Hugh Ragsdale
- Godunov to Nicholas II by Saul Zaklad
- யூடியூபில் Romanovs. The sixth film. Paul I; Alexander I – Historical reconstruction "The Romanovs". StarMedia. Babich-Design(Russia, 2013)