உருகுவே ஆறு
உருகுவே ஆறு | |
ரியோ உருகுவே, ரியோ உருகுவை | |
ஆறு | |
அர்கெந்தீனாவின் மிசியோன்சு பகுதியில் உருகுவே ஆற்றில் சூரியன் மறையும் காட்சி,
| |
நாடுகள் | அர்கெந்தீனா, பிரேசில், உருகுவே |
---|---|
முதன்மை மூலம் | பெலோடாசு ஆறு |
- அமைவிடம் | செர்ரா கெரால், பிரேசில் |
- உயர்வு | 1,800 மீ (5,906 அடி) |
இரண்டாம் நிலை மூலம் | கானோசு ஆறு (சான்டா கேத்ரீனா) |
- அமைவிடம் | செர்ரா கெரால், பிரேசில் |
கழிமுகம் | ரியோ டி லா பிளேடா |
- ஏற்ற மட்டம் | 0 மீ (0 அடி) |
நீளம் | 1,838 கிமீ (1,140 மைல்) |
வடிநிலம் | 3,65,000 கிமீ² (1,40,000 ச.மைல்) [2] |
வெளியேற்றம் | |
- சராசரி | [3] |

உருகுவே ஆறு (The Uruguay River) (எசுப்பானியம்: Río Uruguay, எசுப்பானிய ஒலிப்பு: [uɾuˈɣwai]; போர்த்துக்கேய மொழி: Rio Uruguai, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [uɾuˈɡwaj]) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது வடக்கிலிருந்து தெற்காக பாய்கிறது. பிரேசில், அர்ஜெண்டினா, மற்றும் உருகுவை, ஆகிய நாடுகளின் எல்லைகளை உருவாக்குகிறது. இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான அர்கெந்தீனா மாகாணத்தை மற்ற இரண்டு நாடுகளிலிருந்து பிரிக்கிறது. இந்த ஆறு சான்டா கேத்ரீனா மற்றும் பிரேசிலின் இரியோ கிராண்டு டொ சுல் ஆகிய பகுதிகளுக்கு இடையே பாய்கிறது; மிசியோன்கள், கோரியென்டெஸ் மற்றும் அர்கெந்தீனாவின் என்ட்ரே ரியாஸ் ஆகிய மாகாணங்களின் கிழக்கு எல்லைகளை உருவாக்குகிறது;
ஆற்றின் போக்கு[தொகு]
1838 கிலோமீட்டர் (1142 மைல்கள்)நீளத்தை உடைய இந்த ஆறு, பிரேசிலில், சராசரி கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டர்(660 அடி) உயரத்தில், கானோசு ஆறு (சான்டா கேத்ரீனா) மற்றும் பெலோடாசு ஆறு ஆகியவை இணையுமிடத்தில் உள்ள செர்ரா டோ மார் என்ற இடத்தில் தொடங்குகிறது. [4][5][6][7] இந்த நிலையில் உருகுவே ஆறானது கரடுமுரடான, பிளவுபட்ட நிலப்பகுதியில் பல சுழல்களையும் அருவிகளையும் உருவாக்கியவாறு பயணிக்கிறது. இரியோ கிராண்டு டொ சுல் பகுதியில் இந்த ஆறு நீர்வழிப் போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை.
உருகுவே ஆற்றின் ஒரு அசாதாரண அம்சம் மூழ்கிய பள்ளத்தாக்கு ஆகும். பனிக்காலத்தின் போது, வறண்ட காலநிலை மற்றும் குறுகிய அளவிலான நதி ஆகியவற்றின் காரணமாக இந்த பள்ளத்தாக்கு உருவாகியிருக்கலாம். பள்ளத்தாக்கின் ஆழமானது நதியின் தரைப்பகுதியிலிருந்து கீழே 100 மீட்டர் (330 அடி) வரை உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் அகலமானது, ஆற்றின் அகலத்தில் 1/8 முதல் 1/3 பங்காக உள்ளது.[8][9]
இந்த பள்ளத்தாக்கானது, இரண்டே இரண்டு இடங்களில் தான் பார்க்கத்தக்கதாக அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று, மொகோனா அருவி (யுகுமா அருவி என்றும் அழைக்கப்படுகிறது). அருவிகளும் ஓராண்டில் 150 நாட்களுக்குத் தெரிவதேயில்லை. அவ்வாறான காலத்தில், அவை இன்னும் வேகமான சுழல்களைப் போல தோற்றமளிக்கின்றன. மற்ற பெரும்பாலான நீர் வீழ்ச்சிகளைப் போல ஆற்றின் போக்கிற்கு குத்தாக அல்லாமால் மொகோனா அருவி ஆற்றின் போக்கிற்கு இணையாகக் காணப்படுகிறது. இந்த அருவியானது 10 மீட்டர் (33 அடி) முதல் 12 மீட்டர் (39 அடி) வரை உயரமும், 1800 மீட்டர் (5900 அடி) முதல் 3000 மீட்டர் (9800 அடி) அகலமும் கொண்டவையாக உள்ளது. இந்த அருவியானது, ஆற்றின் முகத்துவாரப் பகுதியிலிருந்து 1215 கிலோ மீட்டர் (755 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. [8][10] 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 17491 எக்டேர் (43220 ஏக்கர்) பரப்பளவிலான டர்வோ மாநிலப் பூங்காவானது, அருவியின் பிரேசிலியப் பகுதியைப் பாதுகாக்கிறது. [11]
பரானா ஆற்றுடன் இணைந்து உருகுவே ரியோ டி லா பிளாடா கயவாயை உருவாக்குகிறது. இந்த ஆறு சால்டோ சிகோ என்ற இடத்திலிருந்து நீர் வழிப் போக்குவரத்திற்கு உகந்ததாக இருக்கிறது. இதன் முக்கிய கிளை நதியாக, ரியோ நெக்ரோ, பிரேசிலுக்குத் தெற்கில் பிறந்து உருகுவை நகர் வழியாக உருகுவே ஆற்றுடன் சங்கமிக்கும் இடம் வரையிலும் 500 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்கிறது. ரியோ நெக்ரோவும், உருகுவேயும் சந்திக்கும் இடமானது உருகுவே ஆறும் ரியோ டி லா பிளேடாவும் காலனியோ துறையில் உள்ள புண்டா கொர்டா என்ற இடத்திலிருந்த 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Río de la Plata". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். http://www.britannica.com/EBchecked/topic/463804/Rio-de-la-Plata. பார்த்த நாள்: 14 August 2010.
- ↑ https://books.google.co.in/books?id=Z3ilzosWx4wC&pg=PA272&redir_esc=y#v=onepage&q&f=false
- ↑ https://books.google.co.in/books?id=Z3ilzosWx4wC&pg=PA272&redir_esc=y#v=onepage&q&f=false
- ↑ "Rio Uruguay" இம் மூலத்தில் இருந்து 2013-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131107053011/http://www.cennave.com.uy/content/view/253/136.
- ↑ Consejo Nacional de Investigaciones Científicas y Técnicas
- ↑ "FACULDADE DE BIOCIÊNCIAS PROGRAMA DE PÓS-GRADUAÇÃO EM BIOCIÊNCIAS – ZOOLOGIA" இம் மூலத்தில் இருந்து 2020-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200204233232/http://www.neotropical.com.br/arquivos/dissert_lisiane.pdf.
- ↑ "The fish fauna of two tributaries of the passo fundo river, uruguay river basin, rio grande do sul, brazil" இம் மூலத்தில் இருந்து 2014-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140527215751/http://www.neotropical.com.br/arquivos/passo_fundo.pdf.
- ↑ 8.0 8.1 "A particular canyon excavated in the large Uruguay River channel (South America)". http://www.cprm.gov.br/33IGC/1205232.html.
- ↑ http://www.wondermondo.com/Countries/SA/Argentina/Misiones/Mocona.htm
- ↑ "Moconá Falls (Yucumã Falls)". Wondermondo. http://www.wondermondo.com/Countries/SA/Argentina/Misiones/Mocona.htm.
- ↑ PES do Turvo (in போர்ச்சுகீஸ்), ISA: Instituto Socioambiental, retrieved 2016-11-11