உள்ளடக்கத்துக்குச் செல்

உய்யக்கொண்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உய்யக்கொண்டான் ராஜராஜசோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றாகும்.

பொருள்

[தொகு]

'உய்யக்கொண்டான்' என்பதற்கு பிழைக்குமாறு அருள் செய்தான் எனத் தமிழ்-தமிழ் அகரமுதலி குறிப்பிடுகிறது. [1]

கால்வாய்

[தொகு]

மாமன்னன் ராஜராஜனின் மகத்தான சாதனைகளுள் ஒன்று காவிரியின் தென் கரையில், குளித்தலைக்கு மேற்கே 15 கிமீ தொலைவிலுள்ள மாயனூர் என்னுமிடத்திலிருந்து ஒரு கால்வாயை வெட்டி, அதன் மூலமாக திருச்சி மாவட்டத்திலுள்ள காவிரியின் தென் கரை ஊர்களான பழையூர், அணலை, புலிவலம், சோமரசம்பேட்டை போன்ற ஊர்களுக்குப் பாசன வசதி செய்ததோடு அந்தக் கால்வாயை ஏரியூர் நாட்டுப்பகுதிக்கு கொண்டு வந்தது, அங்கு [1]

பாசனம்

[தொகு]

ராஜராஜன் உருவாக்கிய ஏரியூர் நாடு, பின்னர் ஏரிமங்கல நாடு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போது ராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி, வையாபுரிப்பட்டி, சுரக்குடிப்பட்டி, காங்கேயம்பட்டி, சோழகம்பட்டி, விண்ணணூர்ப்பட்டி, வேலிப்பட்டி, புதுப்பட்டி போன்ற ஊர்கள் அனைத்தும், உய்க்கொண்டான் வாய்க்காலின் பாசனத்தால் வளம் பெறுகின்றன. காவிரி நீர் உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியே வந்து ராயமுண்டான்பட்டி ஏரியை முலில் நிரப்புகிறது. அந்த ஏரி நிரம்பியவுடன் அடுத்து வெண்டையம்பட்டி பேரேரி நிரம்புகிறது. [1]


மேற்கோள்

[தொகு]

<references>

  1. 1.0 1.1 1.2 த.ம.மணிமாறன், ராஜராஜனால் உருவான உய்யக்கொண்டான், தினமணி புத்தாண்டு சிறப்பிதழ் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=உய்யக்கொண்டான்&oldid=1802815" இலிருந்து மீள்விக்கப்பட்டது