உயூ ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயூ ஆறு அல்லது உரூ ஆறு மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியில் பாயும் ஆறாகும். இது நாட்டின் முதன்மை ஆறான ஐராவதியின் முக்கியக் கிளை நதியான சிந்துவின் ஆற்றின் ஒரு கிளை ஆறாகும். காசின் மாநிலத்தில் அமைந்துள்ள கூகாங் பள்ளத்தாக்கில் இது உற்பத்தியாகி தென்மேற்காக ஓடி வளமான பாசனப் பள்ளத்தாக்கின் வழியாக பாய்ந்தோடி சாகைங் பிரதேசத்தில் உள்ள சிறு நகரமான கோமலினில் இடது புறமாக சிந்துவின் ஆற்றில் கலக்கிறது.[1][2]

பொருளாதாரம்[தொகு]

இந்த ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பாக்கந்த் நகரத்தில் சாடைட்டு என்ற உருமாறிய தீப்பாறை படிகங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.[3][4] இந்தப் படிகக்கல் வெட்டி எடுக்க தோண்டப்படும் சுரங்கங்களிலிருந்து வெளியேரும் கல் மற்றும் மணலால் பருவகாலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு சாலைகள் சேதமடைகின்றன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chindwin River". Encyclopædia Britannica online. பார்க்கப்பட்ட நாள் 2008-12-27.
  2. Merriam-Webster's Geographical Dictionary. Merriam-Webster 1997. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87779-546-9. https://books.google.com/books?id=GN9UQMuNQNkC&dq=uyu+river&pg=PA1246. பார்த்த நாள்: 2008-12-28. 
  3. name=aditnow>"Hpakan Other Rock Mine(Myanmar)". aditnow.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2008-12-27.
  4. Richard W. Hughes & Fred Ward. "Heaven and Hell: The Quest for Jade in Upper Burma". Ruby-Sapphire.com. பார்க்கப்பட்ட நாள் 2008-12-27.
  5. AyeLae. "Areas of Kachin State Hit by Flooding". August 8, 2007 இம் மூலத்தில் இருந்து September 27, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080927074649/http://www.irrawaddy.org/article.php?art_id=8163. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயூ_ஆறு&oldid=3820285" இலிருந்து மீள்விக்கப்பட்டது