உயிர்வேதியியல் கண்டறிதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிர்வேதியியல் கண்டறிதல் (Biochemical detection) என்பது சுவடளவு பகுப்பாய்வு தொடர்புடைய இடங்களில் உயிர்வேதியியல் பொருட்களையும் அவற்றின் அடர்த்தியையும் கண்டறிவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பமாகும். பொதுவாக ஒரு குவார்ட்சு படிக நுண் தராசைப் பயன்படுத்துவதன் மூலம் இக்கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு குவார்ட்சு படிக ஒத்திசைவியின் அதிர்வெண் மாற்றத்தை அளவிடுவதன் மூலம் ஓரலகு பரப்பளவிற்கான நிறை இங்கு அளவிடப்படுகிறது. மற்றொரு முறை நானோ துகள்களை அடிப்படையாகக் கொண்டு கண்டறியப்படுகிறது.[1]

நுண்ணுயிர் உயிர் வேதியியல் சோதனைகள் நுண்ணுயிரிகளை அடையாளம் காணவும், குறைந்த செலவில் கண்டறிதலை நிகழ்த்தவும், அறியப்படாத மாதிரியை அடையாளம் காண்பதற்கான துல்லியத்தை உறுதிப்படுத்தவும் அல்லது அதிகரிக்கவும் தேவையான நேரத்தை குறைக்கின்றன. தற்கால நுண்ணுயிர் அடையாளம் காணும் செயல்முறையில் இம்முறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sanderson, Katharine (23 மார்ச்சு 2010). "Nanoparticle kit could diagnose disease early". Nature. doi:10.1038/news.2010.143. 

நூலோதி[தொகு]

  • Stevens, Molly. Detection of Disease Related Enzymes by Peptide Functionalised Nanoparticles (Thesis / Dissertation ETD). John Alexander Gordon. Imperial College London. இணையக் கணினி நூலக மைய எண் 801212963.
  • Laromaine, A.; Koh, L.; Murugesan, M.; Ulijn, R. V.; Stevens, M. M. (2007). "Protease-Triggered Dispersion of Nanoparticle Assemblies". Journal of the American Chemical Society 129 (14): 4156–4157. doi:10.1021/ja0706504. பப்மெட்:17358069. 
  • Maher, R. C.; Maier, S. A.; Cohen, L. F.; Koh, L.; Laromaine, A.; Dick, J. A. G.; Stevens, M. M. (2010). "Exploiting SERS Hot Spots for Disease-Specific Enzyme Detection†". The Journal of Physical Chemistry C 114 (16): 7231. doi:10.1021/jp905493u.