உயிரியல் வளம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை பெரும் இனச்செளுமை கொண்ட நாடு. இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர, விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல் பிராந்தியங்களுக்குத் தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்திய பருவப்பெயற்சிக் காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் தாழ்நில மழைக்காடுகள் அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக மாற்றம் பெறுகின்றன. இவ்விரு அயனமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன் நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன.

இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரத்தொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரண்கள் எஞ்சியுள்ள வனப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மூன்று உயிரினமண்டல ஒதுக்கங்கள் உள்ளன.

இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை.

இலங்கைத் தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.

பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்தியத் தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய சிறப்புக் குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் சிறகமைப்பு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_வளம்,_இலங்கை&oldid=3409534" இலிருந்து மீள்விக்கப்பட்டது