உயிரியல் இலக்கு
Appearance
ஏற்பிணைப்பி அல்லது ஒரு மருந்து போன்ற ஒரு தனி உருவொன்று தேடிச்சென்று பிணைப்பில் ஈடுபடக்கூடிய ஒரு வாழும் உயிரியின் ஏதாவதொரு அமைப்பு உயிரியல் இலக்கு (biological target) எனப்படும். பொதுவான உயிரியல் இலக்கு வகைகள் புரதங்களும் கருவமிலங்களும் ஆகும். ஒரு மருந்தியல் சம்பந்தமான செயற்படுநிலையில் உள்ள மாத்திரைக்கான இலக்கு, இன்சுலின் போன்ற இயக்குநீருக்கான ஏற்பி இலக்குகள், அல்லது புறத்தூண்டலுக்கான இலக்குகள் என்று வெவ்வேறு உயிரியல் இலக்குகள் வரையறுக்கப்படுகின்றன. ஒரு சமிக்கை மூலம் இலக்கு "மோதப்பட்டு" அதன் செயற்பாடு மாற்றமடைவதே இவற்றின் உள்ளார்ந்த நோக்கம். நொதியங்கள் போன்ற புரதங்கள், அயனிக் கான்கள், ஏற்பிகள் ஆகியன உயிரியல் இலக்குகள் ஆகும்.