உயிரிமூலக்கூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தசையில் காணப்படும் ஓர் உயிரியல் மூலக்கூறான மயோபினின் மாதிரித் தோற்றம்

உயிரிமூலக்கூறு (Biomolecule)[1] என்பது உயிர்வாழும் அங்கிகளில் காணப்படும் அனைத்து மூலக்கூறுகளையும் குறிக்கும். காபோவைதரேட்டு, புரதம், இலிப்பிட்டு, கருவமிலம் ஆகியவை பெரு உயிர் மூலக்கூறுகள் ஆகும். மெட்டாபோலைட்டுக்கள், இரண்டாம் நிலை மெட்டாபோலைட்டுக்கள், இயற்கை உற்பத்திகள் ஆகியவை சிறு உயிர் மூலக்கூறுகள் ஆகும். உயிரியலின் ஓர் உபபகுதியான உயிர் இரசாயனவியலில், மூலக்கூற்று உயிரியல் எனும் துறையில் இவ்வுயிர் மூலக்கூறுகள் பற்றியும், அவை தொடர்பான இரசாயனத் தாக்கங்கள் பற்றியும் கற்பர். கிடைக்கப்பெறும் தன்மை, வேதியியற் தன்மை, நோக்கம் அல்லது பயன்பாடு ஆகிய மூன்று வகைகளிலி இவ்வுயிர்மூலக்கூறுகள் பிரிக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரிமூலக்கூறு&oldid=3545146" இருந்து மீள்விக்கப்பட்டது