உமிழ் நிறமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தனிமம் அல்லது சேர்மம் ஒன்றின் அணு நிறமாலை (Atomic spectrum)அல்லது உமிழ் நிறமாலை அல்லது வெளியிடு நிறமாலை (emission spectrum) என்பது அணு ஒன்றின் இலத்திரன்கள் உயர் ஆற்றல் நிலையில் இருந்து தாழ் ஆற்றல் நிலைக்கு மாறும் போது வெளிவிடப்படும் மின்காந்த அலைகளின் அதிர்வெண்களின் நிறமாலை ஆகும். இது தனிமங்களின் அணுக்கள் கிளர்ந்த நிலையிலுள்ள போது கொடுக்கின்ற நிறமாலையாகும். வெளிவிடப்படும் ஒளியணுவின் ஆற்றல் இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஆற்றல் வேறுபாட்டிற்கு சமன் ஆகும். ஒவ்வொரு அணுவிற்கும் பல இயன்ற மின்னணு மாறுநிலைகள் (electron transitions) காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் வேறுபாட்டைக் கொண்டிருக்கும். இவ்வாறு பெறப்பட்ட பல்வேறு மாறுநிலைகளும் வெவ்வேறு கதிர்வீச்சு அலைநீளங்களைக் கொண்டிருக்கும். இவை ஒரு உமிழ் நிறமாலையாகப் பெறப்படும். ஒவ்வொரு தனிமத்தினதும் உமிழ் நிறமாலையும் வெவ்வேறானவை. எனவே, நிறமாலையியல் மூலம் தெரியாத ஒரு சேர்மத்தின் தனிமங்களைக் கண்டறிய முடியும். இத்தகைய நிறமாலையில் பல்வேறு அலை நீளங்களும் பல நிறங்களாக தனித்தனி கோடுகளாகத் தோன்றும். எனவே இந்த நிறமாலை வரி நிறமாலை (Line spectrum) எனப்படும். பல வழிகளில் அணு நிறமாலையினைப் பெறலாம்

ஐதரசனின் உமிழ் நிறமாலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமிழ்_நிறமாலை&oldid=2223053" இருந்து மீள்விக்கப்பட்டது