உமா பரமேசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உமா பரமேசுவரன் (Uma Parameswaran) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கனடா எழுத்தாளர் என அறியப்படுகிறார். சென்னையில் பிறந்த இவர் சபல்பூரில் வளர்ந்தார். சபல்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார். நாக்பூர் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியானா பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டங்களையும், மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1966 ஆம் ஆண்டு முதல் இவர் கனடாவில் வசித்து வருகிறார். வின்னிபெக் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் ஆங்கிலப் பாடம் கற்பித்தார்.

ஒரு எழுத்தாளராக உமா பரமேசுவரன் புனைகதை, கவிதை, நாடகம் மற்றும் புனைகதை அல்லாத படைப்புகள் பலவற்றை வெளியிட்டுள்ளார். அவளுக்குள் எப்போதும் என்ன இருந்தது என்ற இவரது 1999 ஆம் ஆண்டின் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பு பல விருதுகளை வென்றது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமன் மற்றும் அவரது மனைவி லோகோசுந்தரி ராமன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். சி.வி. ராமன் மற்றும் சுப்பிரமணியம் சந்திரசேகர் ஆகியோருடன் தொடர்புடையவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_பரமேசுவரன்&oldid=3498977" இலிருந்து மீள்விக்கப்பட்டது