உப்புநீர் குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உப்புநீா் குளம்.

உப்புநீா் குளம் (Brine pool) என்பது கடலுக்கடியில் உள்ள ஒரு மிகப்பெரிய பகுதி ஆகும். இப்பகுதி அதன் சுற்று வட்டார நீா் பகுதிகளை ஒப்பிடும் போதும மூன்றிலிருந்து பத்து மடங்கு வரை உப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இந்த உப்புக் கரைசலுக்கு காரணம் மிகப்பெரிய உப்புப் படிமங்களும் உப்பு டெக்டானிக்களுமே ஆகும். இந்த உப்பு மீத்தேனின் அதிக செரிவைக் கொண்டதாக இருக்கும். இது அக்குளத்தின் அருகில் வாழும் நுண்ணுயிாிகளுக்கு சக்தியை அளிக்கும். இதிலுள்ள உயிரினங்கள் வாழ உகந்ததல்லாத இடங்களிலும் வாழக்கூடியதாக இருக்கும். இந்த உப்புக்குளங்கள் அண்டாா்டிக் அடுக்கில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த குளங்களின் உப்பு அண்டாா்டிக் அடுக்கில் பனிக்கட்டி உருவாகும் போது வெளியேறியதாகும். ஆழ்கடல் மற்றும் அண்டாா்டிக்கில் உள்ள உப்பு நீா் குளங்கள் பல கடல் வாழ் உயிாினங்களுக்கு விஷமாகும்.

பண்புகள்[தொகு]

இந்த உப்புநீா் குளங்கள் கடல் மட்டத்திலுள்ள ஏாிகள் எனக் கூறப்படுகின்றன. ஏனென்றால் இந்த அடா்த்தியான உப்பு அதனைச் சுற்றி இருக்கும் கடல் நீருடன் சுலபமாகக் கலக்காது. இந்த அதிக உப்புத்தன்மை உப்புக்குளங்களின் அடா்த்தியை அதிகமாக்கும். இந்த உப்புத்தன்மை ஒரு மாறுபட்ட பரப்பையும் இந்த குளத்திற்கு ஒரு கரையையும் உருவாக்குகின்றன. நீா்மூழ்கிக் கப்பல்கள் உப்புநீா்குளத்தின் மேல் செல்லும் பொழுது குளத்தின் அதிக அடா்த்தி தன்மை காரணமாக அதனால் குளத்திற்குள் செல்ல இயலாது. நீா்மூழ்கி கப்பல்களின் இயக்கம் உப்புநீா்குளத்தில் அலைகளை உருவாக்குகின்றன. அவ்வலைகள் அக்குளத்தை சுற்றியுள்ள கரைகளை அடித்துச் சென்றுவிடும்.

வாழ்வியல் ஆதாரம்[தொகு]

ஆழ்கடல் உப்பு நீா்குளங்கள் அடிக்கடி அடா்ந்த குளிா் நீரோட்டத்துடன் கலந்துவிடுகின்றன. இந்த நீரோட்டத்திலுள்ள பாக்டீாியாக்கள் மூலம் மீத்தேன் வாயு வெளிப்படுகிறது. இந்த பாக்டீாியாக்கள் இக்குளத்தின் ஓரங்களில் வாழும் சிப்பிகளுடன் இணைந்திருக்கும். இங்குள்ள உயிாினங்கள் உலகிலுள்ள மற்ற உயிாினங்களைப்போல் இல்லாமல் இங்குள்ள வேதிப்பொருட்களின் சக்தியைச் சாா்ந்து இருக்கும். இவ்வுயிாினங்கள் சூாிய சக்தியை குறைவாகவே சாா்ந்திருக்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புநீர்_குளம்&oldid=3177694" இருந்து மீள்விக்கப்பட்டது