உபேகா சித்ரசேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபேகா சித்ரசேனா இலங்கை நாட்டைச் சோ்ந்த பாலே நடனக் கலைஞர் மற்றும் நடன ஆசிரியர் ஆவார்.[1] 1950 ஆம் ஆண்டுகளில் இலங்கை நாட்டில் பாலே அறிமுகத்திற்கு முன்னோடியாக விளங்கிய நடன ஜோடிகளான வரிஜா மற்றும் சித்ரசேனா ஆகியோரில் இவரும் ஒருவர். 2011 ஆம் ஆண்டில் மனோரி விஜேசேகரா அவா்களால் "இலங்கையின் மிகச்சிறந்த பெண் நடனக் கலைஞர்" எனப் புகழப்பட்டார். மேலும் நூதன முரசுடனனான தனது உறவை தனித்துவம் வாய்ந்ததது என்று ஊடகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்..[2] தனது அறுபதாவது வயதில் அவர் நடன நிகழ்ச்சிகளில் இருந்து ஓய்வு பெறவும், முழுநேர பாலே நடனக் கலைக் கற்பித்தலில் ஈடுபடவும் முடிவு செய்தார்.[3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

உபேகா சித்ரசேனா குழந்தையாக இருந்தபோது, கொழும்பின் கோல்பெட்டி சுற்றுப்புறத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நவீன நடனத்தின் முன்னோடிகளும் பிரபல நடனக் கலைஞா்களுமாகிய மார்தா கிரஹாம் மற்றும் பால் டெய்லர் உள்ளிட்டோர் நடன சுற்றுப் பயணங்களின் போது அடிக்கடி வந்து செல்வா்.. நடன உலகில் வளர்ந்ததால், தானும் அதே பாதையை தேர்வு செய்ய உபேகா முடிவு செய்தார். தொழில்முறை நடனக் கலைஞராக மாறுவதற்காக தனது பெற்றோரால் நிறுவப்பட்ட சித்ரசேனா நடனப் பள்ளியில் பயிற்சி பெற்றார். இது நவீன மேடை நடனக் கலைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் அந்தக் காலத்தின் முதல் மற்றும் ஒரே இலங்கை நிறுவனம் ஆகும்.[4]

தொழில்[தொகு]

சித்ரசேனா ஏழு வயதாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில், குழந்தைகள் பாலேவான வனஜாவில் முதல் நிலை நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.[5] அவரது முதல் முன்னணி பாத்திரம் 1965 இல், பதினைந்து வயதில் குழந்தைகள் பாலே ரான்கிகிலியில் . அதே ஆண்டில் அவர் காரடியா மற்றும் நள தமயந்தி ஆகிய பாலே நடன நிகழ்ச்சிகளில் நடனமாடினார், இது அவரது பெற்றோருடன் தோன்றிய முதல் மேடை நிகழ்வாகும்.[6] கல்விப் படிப்பை முடித்த பிறகு பிறகு, அவர் 1971 இல் தனது முதல் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். 1975 ஆம் ஆண்டில் அவர் தனது தந்தையுடன் கரடியாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடனமாடினார், இந்த பாத்திரம் அவரது தாயார் பல ஆண்டுகளாக நடித்ததாகும்.[7] 1978 ஆம் ஆண்டில், கிங்கினி கோலாமா என்ற முக்கிய பாத்திரத்தில் நடனமாடினார்.[8] 2011 முதல் அவர் மேடை நிகழ்ச்சிகளில் ஆடவில்லை, ஆனால் அவரது நடனப் பள்ளி மூலமாக இளம் நடனக் கலைஞர்களுக்கு கற்பித்தும், வழிகாட்டியும் வருகிறார்.[1] இலங்கை நாட்டுக் குழந்தைகளுக்கு நடனம் கற்க ஒரு உண்டு உறைவிட நடனப் பள்ளியைக் கட்டுவதே அவரது தற்போதைய நோக்கமாக உள்ளது.[9]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1973 ஆம் ஆண்டு எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமங்களின் இயக்குநரான திவாகர் ரத்னதுரை என்பவரை மணந்த சித்ரசேனாவிற்கு குழந்தைகள் ஏதும் இல்லை. 2002 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் தனது கணவர் தனது தொழில் வாழ்க்கையில் சுதந்திரமாகக் கவனம் செலுத்த தன்க்கு வாய்ப்பு அளித்தாகக் கூறி இருந்தார்.[10] சித்ரசேனா வஜிரா கலாயத்தநாய நடனப் பள்ளியின் வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை எதிர்காலத்தில் தனது மருமகன்களுக்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 name="danseuse">"Upeka: Sri Lanka's Fiery Danseuse". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Upeka: Sri Lanka's Fiery Danseuse". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. name="Feb 10, 2010 – Upeka Chitrasena – Sri Lankan Dance on the World ,Stage">"Feb 10, 2010 – Upeka Chitrasena – Sri Lankan Dance on the World Stage". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  4. name="On Rhythm " A lot of people thought i had it easy"">"On Rhythm " A lot of people thought i had it easy"" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. name="On Rhythm " A lot of people thought i had it easy"">"On Rhythm " A lot of people thought i had it easy"" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Personality of the week : Upeka Chitrasena". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  7. name="On Rhyphm " A lot of people thought i had it easy"">"On Rhyphm " A lot of people thought i had it easy"" (PDF). பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. name="Upeka Chitrasena Says Goodbye to the Stage">"Upeka Chitrasena Says Goodbye to the Stage". Archived from the original on 24 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. name="Upeka Chitrasena Says Goodbye to the Stage">"Upeka Chitrasena Says Goodbye to the Stage". Archived from the original on 24 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. name="Personality of the week : Upeka Chitrasena">"Personality of the week : Upeka Chitrasena". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  11. name="Dynamic dancer who loves tradition">"Dynamic dancer who loves tradition". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபேகா_சித்ரசேனா&oldid=3928022" இலிருந்து மீள்விக்கப்பட்டது