உள்ளடக்கத்துக்குச் செல்

உதய் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதய் சிங்
Uday Singh
பூர்ணியா
பூர்ணியா நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
பதவியில்
2004–2014
முன்னையவர்பப்பு யாதவ்
பின்னவர்சந்தோசு குமார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 நவம்பர் 1952 (1952-11-09) (அகவை 71)
பட்னா, பீகார்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உரூபி சிங்
பிள்ளைகள்1 மகன் மற்றும் 1 மகள்
வாழிடம்பூர்ணியா

உதய் சிங் (Uday Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1952 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 14 ஆவது மற்றும் 15 ஆவது மக்களவைகளில் இவர் உறுப்பினராக இருந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக பீகாரின் பூர்ணியா தொகுதியை உதய் சிங் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மாதுரி சிங்கின் மகனாக அறியப்படுகிறார். மாதுரி சிங்கும் இதே தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு மாறினார்.[1] பீகாரின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர் 18000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு சொந்தக்காரர் ஆவார். இவரிடம் தனி விமானமும் இருந்தது. ஒரு தொழிலதிபராக பாரதீய சனதா மற்றும் காங்கிரசு கட்சிக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Detailed Profile: Shri Uday Singh". The National Portal of India. National Informatics Centre. Archived from the original on 4 May 2012. பார்க்கப்பட்ட நாள் 4 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதய்_சிங்&oldid=3810251" இலிருந்து மீள்விக்கப்பட்டது