உணவு உட்கொள்ளல் தொடர்பான நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Eating disorder
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு psychiatry, counselling, clinical psychology
ICD-10 F50.
ICD-9-CM 307.5
MeSH D001068

ஒரு தனிநபரின் உடல் மற்றும் மன சுகாதார கேடு விளைவிக்கத்தக்கதாக குறைந்த அளவில் அல்லது மிதமிஞ்சிய அளவில் உணவு உட்கொள்ளும் அசாதாரண பழக்கங்கள் உணவு உட்கொள்ளல் தொடர்பான நோய்கள் (Eating disorders) என்று வரையறுக்கப்படுகின்றன. Bulimia nervosa, anorexia nervosa, மற்றும் binge eating disorder முதலியன இவற்றுள் முக்கியமானவையாகும். ஓப்பீட்டளவில் ஆண்களை விட பெண்களே அதிகளவிற் பாதிக்கப்படுகின்றனர். மேலைத்தேய உணவுக் கலாச்சாரம் இந் நோய்கள் உலக அளவில் அதிகரிப்பதற்குப் பிரதான காரணமாக உள்ளது.

இந் நோய்களிற்கு அடிப்படையாகும் பிரதான காரணிகள் இன்னும் மருத்துவ உலகில் அறியப்படவில்லை. ஆனால் ADHD உள்ள பெண்களில் இந்நோய் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடல் அமைப்புத் தொடர்பான கவலைகள் பெண்களை இந்நோய் அதிகளவில் பாதிக்க காரணமாகிறது. சில ஆராய்ச்சிகள் மரபுரிமையாக இந் நோய்களால் இலகுவில் பாதிக்கப்படும் தன்மையைச் சிலர் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளன. இந் நோய்களிற் பெரும்பாலானவை உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்தக் கூடியவை எனினும் சில மரணத்திற்கும் இட்டுச் செல்லக்கூடியவை.