உணர்வும் உருவமும் (நூல்)
Appearance
நூலாசிரியர் | அ. ரேவதி |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொருண்மை | தமிழ்நாட்டு அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள் |
வகை | தொகுப்பு |
வெளியீட்டாளர் | அடையாளம் பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2005 |
பக்கங்கள் | 115 |
உணர்வும் உருவமும் என்பது திருநங்கைகள் வாழ்வியல் பற்றிய ஒரு தமிழ் நூல் ஆகும். இதனை திருநங்கையான அ. ரேவதி எழுதியுள்ளார். அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திருநங்கைகளின் வாழ்வியலைப் பற்றி, பல்வகைப்பட்ட பாலினத்தவர்களின் உரிமைகளைப் பற்றி வெளிவந்த முன்னோடித் தமிழ் நூல்களில் இது ஒன்றாகும்.[1] திருநங்கையர்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் கோருகின்றது என்று பெருமாள் முருகன் பின்னுரையில் கூறியுள்ளார்.
“ | ஆண் உடலைக் கொடுத்து, அதற்குள் பெண் உணர்வை வைத்து திருவிளையாடல் புரிகிறார்களே அவர்கள்கடவுள்களா? பெற்றவர்களா? நான் என்ன கொழுப்பெடுத்துப்போயா வேஷம் கட்டிக் கொண்டு அலைகிறேன்? நான் யார்? எந்தப் பாலினத்தைச் சார்ந்தவள்? நான் இப்படி இருப்பது சரியா? தவறா? என் கேள்விகளுக்கு எங்கு விடை கிடைக்கும்?" | ” |
- முன்னுரையில் ரேவதி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ரேவதி: ஆண் உடலில் சிக்கிக்கொண்ட பெண்". காலச்சுவடு. Archived from the original on 31 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
வெளியிணைப்புகள்
[தொகு]- உணர்வும் உருவமும்: அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள், கூகுள் புக்ஸ்