உசாசி சக்ரவர்த்தி
உசாசி சக்ரவர்த்தி Ushasie Chakraborty | |
---|---|
சக்ரவர்த்தி 2017-ல் குசுமிதர் கப்போ படப்பிடிப்பின் போது பேட்டி | |
பிறப்பு | கொல்கத்தா, இந்தியா |
பணி | நடிகர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சத்யாபதி |
உசாசி சக்ரவர்த்தி (Ushasie Chakraborty) என்பவர் இந்திய நடிகை மற்றும் வங்காள மொழி படங்களில் பணிபுரியும் கல்வியாளர் ஆவார். இவர் அஞ்சன் தத்தின் பியோம்கேஷ் பக்ஷியின் திரைப்படத் தழுவல்களில் சத்யபதியாக நடித்துள்ளார்.[1] உசாசி தற்போது பெங்காலி தொலைக்காட்சி நிகழ்ச்சியான சிறீமோயியில் சூன் குகாவாக நடிக்கிறார்.[2]
தொழில்
[தொகு]அஞ்சன் தத்தின் பியோம்கேஷ் பக்ஷியின் திரைப்படத் தழுவலின் ஒவ்வொரு படத்திலும் சக்ரவர்த்தி சத்யபதியாக நடித்துள்ளார்.[3] ரஞ்சனா அமி அர் அஷ்போனா, பெட்ரூம்,[4] ஷாஜஹான் ரீஜென்சி, முகோமுகி, மற்றும் குசுமிதர் கோல்போ உள்ளிட்ட பிற படங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார்.[5] சிறீமோயியில் சூன் பாத்திரத்தில் இவரது பாத்திரம் தி டைம்ஸ் ஆப் இந்தியாவால் "பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமானது" என்று விவரித்துள்ளது. மேலும் இது "சூன் ஆன்ட்டி' மற்றும் இவரது 'மாசி' பற்றிய கேலிச்சித்திரங்கள் சமூக ஊடகங்கள் பரவியது" என்றும் குறிப்பிடுகிறது.[6]
கல்வி
[தொகு]2020ஆம் ஆண்டில், சக்ரவர்த்தி தனது தந்தையின் மரணம் உட்பட தனிப்பட்ட சவால்களுக்கு இடையில் தனது முனைவர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.[6][7] ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில், இவர் தனது ஆய்வியல் நிறைஞர் ஆய்வினை பெண் ஓட்டுநர்களுக்கு எதிரான சார்பு பற்றி சமர்ப்பித்துள்ளார்.[8]
சமூக சேவை
[தொகு]கோவிட்-19 பெருந்தொற்றின் போது, சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வழக்கமான சமூக சமையலறையை அமைத்து சக்ரவர்த்தி உதவினார்.[9]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சக்ரவர்த்தி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சியாமல் சக்ரவர்த்தியின் மகள் ஆவார்.[10] இவர் ஆகத்து 2020-ல் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[7][11]
2011ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கா பிரச்சாரம் செய்தார்.[12] சூன் 2011-ன் நேர்காணலில், தனது தந்தையின் அரசியல் அடையாளம் திரைப்படத் துறையில் தனக்கு ஒரு பாதகமாக இருப்பதாக இவர் கூறினார்.[4]
திரைப்படவியல்
[தொகு]- காலேர் ரகல் (2009)
- பியோம்கேஷ் பக்ஷி (2010)
- ரஞ்சனா அமி அர் அஷ்போனா (2011)[4]
- அபார் பியோம்கேஷ் (2011)
- பெட்ரூம் (2012)[4]
- ஜிபோன் ரங் பெராங் (2012)
- அபார் பியோம்கேஷ் பக்ஷி-சித்ரச்சோர் (2012)[13]
- கங்கல் மல்சாட் (2013)
- மிசசு. சென் (2013)
- தீன் பட்டி (2014)
- பியோம்கேஷ் பைரே எலோ (2014)
- பியோம்கேஷ் பக்ஷி (2015)
- பியோம்கேஷ் ஓ அக்னிபன் (2017)
- ஷாஜஹான் ரீஜென்சி (2018)[5]
- முக்கோமுகி (2018)[5]
- குசுமிதர் கப்போ (2019)[5]
தொலைக்காட்சி
[தொகு]- பரீக்ஷ்யா (தூர்தர்ஷன் வங்களாம், 2000)
- எக்கானே ஆகாஷ் நீல் (ஸ்டார் ஜல்ஷா 2008-2009)
- ஸ்ரீமோயி (ஸ்டார் ஜல்ஷா 2019–2021)[14]
வலைத் தொடர்
[தொகு]- விர்ஜின் மொஹிடோ (2018)[15]
விருதுகள்
[தொகு]ஆண்டு | விருது | பிரிவு | பெயர் | முடிவுகள் |
---|---|---|---|---|
2022 | மேற்கு வங்க டெலி அகாதமி விருதுகள் | சிறந்த நடிகை (எதிர்மறை பாத்திரம்) [16] | சிறீமோயி | வெற்றி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ushasie Chakraborty - Movies, Biography, News, Age & Photos". BookMyShow. பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
- ↑ "Ushasie Chakraborty, June Auntie: 'পরম সুন্দরী' থেকে ডেডলিফট গার্ল! নেটিজেনদের মুগ্ধ করছেন 'হট' জুন আন্টি". Aaj Tak বাংলা (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 20 December 2021.
- ↑ "The Bomkesh gang". The Telegraph (Kolkata) (Calcutta, India). 14 August 2010 இம் மூலத்தில் இருந்து 14 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120914143002/http://www.telegraphindia.com/1100814/jsp/entertainment/story_12809041.jsp.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Dasgupta, Priyanka (12 June 2011). "'Baba's political identity is my disadvantage'". The Times of India இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130222111949/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-12/news-interviews/29649820_1_colours-left-front-die-hard-fan.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Ganguly, Ruman (28 May 2019). "Ushasie Chakraborty makes a comeback to the small screen". Entertainment Times. TNN. https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/news/ushasie-chakraborty-makes-a-comebcak-to-the-small-screen/articleshow/69543163.cms.
- ↑ 6.0 6.1 TOI (4 August 2020). "Ushasie Chakraborty tests negative for COVID-19; to resume shoot". The Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/bengali/ushasie-chakraborty-tests-negative-for-covid-19-to-resume-shoot/articleshow/77343246.cms.
- ↑ 7.0 7.1 Of India, Times (28 September 2020). "Actress Ushasie Chakraborty submits her PhD thesis despite facing hurdles; her zeal leaves fans inspired". Times (Calcutta, India). https://timesofindia.indiatimes.com/tv/news/bengali/actress-ushasie-chakraborty-submits-her-phd-thesis-despite-facing-hurdles-her-zeal-leaves-fans-inspired/articleshow/78364178.cms.
- ↑ Dasgupta, Priyanka (11 August 2016). "Rough ride for women behind wheels". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/Rough-ride-for-women-behind-wheels/articleshow/53642942.cms.
- ↑ "Bengali actor Ushasie Chakraborty arrives to lend a helping hand". https://www.thehindu.com/news/national/other-states/june-arrives-to-lend-a-helping-hand/article31427267.ece.
- ↑ Bhattacharyya, Meghdeep (4 April 2011). "CPM young guns bat for poll Turk". Telegraph Calcutta (Calcutta, India) இம் மூலத்தில் இருந்து 3 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130203190404/http://www.telegraphindia.com/1110404/jsp/bengal/story_13806839.jsp.
- ↑ Roy, Subhajoy (31 January 2021). "A ‘virtual epitaph’ for those who died of Covid-19". The Telegraph India. https://www.telegraphindia.com/west-bengal/calcutta/a-virtual-epitaph-for-those-who-died-of-covid-19/cid/1805217.
- ↑ "SRKSPACE". http://www.telegraphindia.com/1110425/jsp/entertainment/story_13897536.jsp.
- ↑ Chatterji, Shoma A. (12 April 2012). "Flawed logic mars thriller Abaar Byomkesh Bakshi-Chitrachor". The Indian Express. http://archive.indianexpress.com/news/flawed-logic-mars-thriller-abaar-byomkesh-bakshichitrachor/934986/.
- ↑ "‘Rani Rashmoni’ tops the TRP chart followed by 'Sreemoyee'". https://timesofindia.indiatimes.com/tv/news/bengali/rani-rashmoni-tops-the-trp-chart-followed-by-sreemoyee/articleshow/74374392.cms.
- ↑ "Web series on women and virginity - Times of India" (in en). The Times of India. 19 March 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/news/web-series-on-women-and-virginity/articleshow/63365872.cms.
- ↑ "Tele Academy Awards 2022 Winners: মিঠাই -সিদ্ধার্থ থেকে জুন আন্টি! দেখুন টেলি আকাদেমিতে অ্যাওয়ার্ডসে কারা পেলেন সেরার সেরা পুরস্কার". Aaj Tak বাংলা. https://bangla.aajtak.in/cinema-and-tv-serial-news/television/story/mithai-soumitrisha-adrit-ushasie-aindrila-ambarish-and-others-gets-awards-see-west-bengal-tele-academy-awards-2022-winner-list-award-given-mamata-banerjee-soc-352738-2022-03-11.