ஈ. மா. மான்ராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ. மா. மான்ராஜ்
பிறப்புதிருவில்லிபுத்தூர்
தேசியம்இந்தியர்
கல்விஇளநிலை வணிகவியல்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ஈ. மா. மான்ராஜ் (E. M. Manraj) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூரைச் சார்ந்தவர். மான்ராஜ் சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படித்துள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர் திருவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 16வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manraj, E.M.(AIADMK):Constituency- SRIVILLIPUTHUR (SC)(VIRUDHUNAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._மா._மான்ராஜ்&oldid=3488898" இலிருந்து மீள்விக்கப்பட்டது