ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல்
நாள்மே மாதம் மூன்றாம் ஞாயிறு
அமைவிடம்மெரீனா கடற்கரை
காரணம்ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர் நினைவு
இணையதளம்may17iyakkam.com

ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் என்பது ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு ஆண்டின் மே மாதத்தில் வரக்கூடிய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இயங்கிவரும் மே 17 இயக்கம் எனும் அமைப்பு, இந்த நிகழ்ச்சியினை பொறுப்பெடுத்து நடத்திவருகிறது.

2012 நினைவேந்தல்[தொகு]

  • மே 20, ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது.
  • வட இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர் ராம்விலாசு பாசுவன் கலந்துகொண்டார்.

2013 நினைவேந்தல்[தொகு]

  • மே 19, ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது[1].

2014 நினைவேந்தல்[தொகு]

  • மே 18 ஞாயிறன்று மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட்டில், ஈழத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு மெழுகுவர்த்திகளை ஏற்றி தீப அஞ்சலியாக சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது.[2]

2015 நினைவேந்தல்[தொகு]

  • மே 17 ஞாயிறன்று நினைவேந்தல் நிகழ்வு, மே பதினேழு இயக்கத்தின் ஏற்பாட்டில் சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. கலந்துகொண்டோர், மெழுகுவர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.[3][4]

2016 நினைவேந்தல்[தொகு]

  • மே 29, 2016 (ஞாயிறு) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது.[5][6]
  • தேர்தல் நடைமுறைகள் காரணமாக மே மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.[7]

2017 நினைவேந்தல்[தொகு]

  • மே 21, 2017 (ஞாயிறு) அன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது [8].

2018 நினைவேந்தல்[தொகு]


இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]