உள்ளடக்கத்துக்குச் செல்

ஈமியர் ஏரி

ஆள்கூறுகள்: 52°17′N 5°20′E / 52.283°N 5.333°E / 52.283; 5.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈமியர்
ஆள்கூறுகள்52°17′N 5°20′E / 52.283°N 5.333°E / 52.283; 5.333
வகைஎல்லைப்புற ஏரி
முதன்மை வரத்துஈம் ஆறு
வடிநில நாடுகள்நெதர்லாந்து
மேற்பரப்பளவு13.4 km2 (5.2 sq mi)
Islandsதோடெ ஓண்டு

ஈமியர் (Eemmeer) நெதர்லாந்து நாட்டில் உள்ள ஓர் ஏரியாகும். நெதர்லாந்து நாட்டின் நடுவே பிலேவோலாண்டு, உத்ரத் மற்றும் வடக்கு ஒல்லாந்து மாகாணங்களுக்கிடையே ஈமியர் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் மேற்பரப்பு (13.4 சதுரகிலோமீட்டர்) 5.2 சதுர மைல்களாகும். இந்த ஏரிக்கு நடுவில் தோடெ ஓண்டு என்ற ஒரு தீவு அமைந்துள்ளது. பிலேவோலாந்தின் நெதர்லாந்து கடலிலிருந்து மீட்கப்பட்ட தாழ்நிலப்பகுதியை பழைய நிலப்பரப்பின் உயர்ந்த பகுதியிலிருந்து புவி நீரியல் ரீதியாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படும் புற ஏரிகளின் வரிசையில் ஈமியரும் ஒன்றாகும். மேற்கில் உள்ள கூய்மீர் ஏரிகளுடன் ஈம்மீர் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏரிகளும் நெடுஞ்சாலை ஏ27 பாலத்தால் கடக்கப்படும் இடத்திலும், கிழக்கில் நிச்கெர்கெர்னாவ் ஏரியுடனும் இணைக்கப்பட்டுள்ளன. ஆம்சுடர்டாமிற்கு அருகிலுள்ள மார்க்கர்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள ஏரிகளுடனும் ஈமியர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரி அமைப்பின் நீர் ஆதாரங்கள் ஐசெசெல் நதி (ரைன் கிளை) மற்றும் வட கடலை நோக்கிய வடிகால்களாகும்.[1]

மேற்கோள்

[தொகு]
  1. Joachim Rozemeijer (2021). "Climate variability effects on eutrophication of groundwater, lakes, rivers, and coastal waters in the Netherlands". Science of the Total Environment 771: 145366. doi:10.1016/j.scitotenv.2021.145366. பப்மெட்:33545469. Bibcode: 2021ScTEn.771n5366R. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈமியர்_ஏரி&oldid=4195304" இலிருந்து மீள்விக்கப்பட்டது